Search

Menu

Keeping you Informed News and Views..

சுவிட்சர்லாந்தில் டெல்டா திரிபு நிலை ஊடுருவல் : மருத்துவர்கள் தீவிரமாக ஆராய்வு

சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளி ஆகிய விதிகளை தொடர்ந்து கடைபிடிக்குமாறு அதிகாரிகள் மக்கள் அனைவருக்கும் தொடர்ந்து அறிவுறுத்துகின்றனர்.

சுவிட்சர்லாந்தில் டெல்டா திரிபு நிலை ஊடுருவல் : மருத்துவர்கள் தீவிரமாக ஆராய்வு

சுவிஸர்லாந்தில் அண்மைக்காலமாக புதிய தொற்றாளர் எண்ணிக்கை குறைவடைந்திருந்த நிலையில், புதிய டெல்டா திரிபு நிலை படிப்படையாக ஊடுருவ ஆரம்பித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரப் பிரிவினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

கொவிட் நிலை சுருக்கமாக

  • புதிய தொற்றாளர் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், டெல்டா திரிபு படிப்படியாக ஊடுருவி வருகிறது.
  • ஜூலை மாத ஆரம்பத்தில் சுமார் 30% புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
  • ஜூன் 26 முதல், மூன்றாம் நாட்டிலிருந்து முழுமையாக தடுப்பூசி எடுத்துக்கொண்ட எவரும் சுவிட்சர்லாந்திற்குள் நுழையலாம்.
  • இவர்களுக்கு சோதனை அல்லது தனிமைப்படுத்தல் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்படலாம்.
  • தடுப்பூசி இடும் நடவடிக்கை நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது.
  • டிசம்பர் பிற்பகுதியிலிருந்து ஜூலை 4 வரை 7.74 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
  • சுமார் 38% மக்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்.
  • 8- .6 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சுவிட்சர்லாந்தில் கொவிட் -19 ஆல் 10,300 இற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

தற்போதைய நிலைமை என்ன?

கடந்த பெப்ரவரி முதல் ஏப்ரல் வரை, சுவிட்சர்லாந்தில் புதிய வைரஸ் வகைகள் தோன்றியதன் மூலம் தொற்று விகிதம் உயர்ந்து பின் குறையத் தொடங்கியது. ஜூன் 21 இன் பின், சராசரியாக புதிய தினசரி நோய்த்தொற்றுகள் 200 க்கும் குறைவாக இருந்தன.

2020 டிசம்பரின் பிற்பகுதியில் தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. மேலும் கோடை காலத்திற்குள் ஆறு மில்லியன் மக்களுக்கு (70% மக்கள்) தடுப்பூசி போட அரசாங்கத்தால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

8.6 மில்லியன் மக்கள் தொகைக்கு ஃபைசர் / பயோஎன்டெக், மாடர்னா, அஸ்ட்ராஜெனெகா, குரேவாக், நோவாவாக்ஸ் ஆகிய தடுப்பூசி வகைகளிலிருந்து சுமார் 36 மில்லியன் தடுப்பூசிகளை அதிகாரிகள் பெற்றுள்ளனர். இவற்றுள் இதுவரை, ஃபைசர் / பயோஎன்டெக் மற்றும் மாடர்னா ஆகிய இரண்டும் அங்கீகரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஜான்சன் & ஜான்சனின் ஒற்றை-டோஸ் தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டது, ஆனால் FOPH ஆல் உத்தரவிடப்படவில்லை.

சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளி தொடர்பான பொருந்தக்கூடிய விதிகளை தொடர்ந்து கடைபிடிக்குமாறு அதிகாரிகள் மக்கள் அனைவருக்கும் தொடர்ந்து அறிவுறுத்துகின்றனர்.

புதிய தொற்றாளர் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைந்திருந்த நிலையில், டெல்டா திரிபு படிப்படியாக ஊடுருவி வருவதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

சுவிட்சர்லாந்தில் டெல்டா திரிபு நிலை ஊடுருவல் : மருத்துவர்கள் தீவிரமாக ஆராய்வு

சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளி ஆகிய விதிகளை தொடர்ந்து கடைபிடிக்குமாறு அதிகாரிகள் மக்கள் அனைவருக்கும் தொடர்ந்து அறிவுறுத்துகின்றனர்.

சுவிட்சர்லாந்தில் டெல்டா திரிபு நிலை ஊடுருவல் : மருத்துவர்கள் தீவிரமாக ஆராய்வு

Search here