Search

Menu

Keeping you Informed News and Views..

சுவிட்சர்லாந்தில் தொடர்ந்தும் கன மழை

தொடர்ந்தும் வெள்ள அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் தொடர்ந்தும் கன மழை

சுவிட்சர்லாந்தின் பல இடங்களில் தொடர்ச்சியாக கன மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் கடுமையான மழை பெய்து வருவதனால் தொடர்ந்தும் வெள்ள அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக ஏ2 வீதி தற்காலிகமாக மூடப்பட்டதால் அந்த வீதி வழியான போக்குவரத்து தடைப்பட்டது.

சில பகுதிகளில் மணிக்கு 135 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியதாக தெரிவிக்கப்படுகின்றது. பலத்த காற்று காரணமாக சூரிச்சிற்கு பாதிப்புக்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று மற்றும் சீரற்ற காலநிலை தொடர்பில் சூரிச் நகரில் சுமார் ஆயிரம் தொலைபேசி அழைப்புக்கள் ஊடாக கடந்த திங்கட்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக சூரிச்சின் பொதுப் போக்குவரத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்திருந்தது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

சுவிட்சர்லாந்தில் தொடர்ந்தும் கன மழை

தொடர்ந்தும் வெள்ள அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் தொடர்ந்தும் கன மழை

Search here