Search

Menu

Keeping you Informed News and Views..

சுவிட்சர்லாந்தில் புகலிடக் கோரிக்கைகள் உயர்வடையும்

கடந்த ஆண்டில் மொத்த புகலிடக் கோரிக்கை எண்ணிக்கையானது 11,041 ஆக காணப்பட்டது.

சுவிட்சர்லாந்தில் புகலிடக் கோரிக்கைகள் உயர்வடையும்

சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் ஆண்டுகளில் புகலிடக் கோரிக்கைகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஆண்டில் மொத்த புகலிடக் கோரிக்கை எண்ணிக்கையானது 11,041 ஆக காணப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 14,269 ஆக காணப்பட்டது.

கொவிட் நிலைமையால் எல்லைகள் மூடப்பட்டிருந்த காரணத்தினால் புகலிடக் கோரிக்கையாளர் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 15,000 ஐ கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.

ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, மொரக்கோ, துருக்கி, ஈராக், சிரியா அகிய நாடுகளிலிருந்து அதிக எண்ணிக்கையிலான கோரிக்கையாளர்கள் கடந்த ஓராண்டு காலத்தில் புகலிட அந்தஸ்து கோரி விண்ணப்பித்துள்ளனர்.

வடக்கு மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகளிலிருந்தும் புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் அதிகளவில் கிடைக்கக் கூடும் என சுவிட்சர்லாந்து குடிவரவு செயலகம் தெரிவித்துள்ளது. சொந்த நாடுகளில் கொவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் அதிக எண்ணிக்கையிலானோரை எதிர்பார்க்க முடியும் என குறிப்பிட்டுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

சுவிட்சர்லாந்தில் புகலிடக் கோரிக்கைகள் உயர்வடையும்

கடந்த ஆண்டில் மொத்த புகலிடக் கோரிக்கை எண்ணிக்கையானது 11,041 ஆக காணப்பட்டது.

சுவிட்சர்லாந்தில் புகலிடக் கோரிக்கைகள் உயர்வடையும்

Search here