சுவிட்சர்லாந்தில் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 2023ம் ஆண்டு முதல் 20 அல்லது அதற்கு மேற்பட்ட வீதத்தில் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் சாதாரண ஓர் குடும்பம் ஒன்றின் மின்சாரக் கட்டணம் 180 சுவிஸ் பிராங்குகளினால் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார உற்பத்தி நிறுவனங்கள் கூடுதல் அளவில் உற்பத்திக்காக செலவிட நேரிட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் போர் காரணமாக இவ்வாறான ஓர் நிலைமை உருவாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் விலைக் கட்டுப்பாட்டு முறைமைகளினால் உடனடியாக விலைகள் உயர்த்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.