சுவிட்சர்லாந்தில் மின்சார தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக ஏற்கனவே எதிர்வுகூறல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மின்சார விநியோகம் தடைப்படும் சாத்தியங்கள் பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் குளிர்காலத்தில் மின்சார விநியோகம் தடைப்படாது என உறுதிப்படக் கூற முடியாது என சமஷ்டி மின்சார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் மின்சாரத் தடை என்பது தற்போதைய காலம் அளவிற்கு எப்பொழுது நடைமுறைச்சாத்தியமானதாக இருந்ததில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மின்சாரத்தை இடையறாது வழங்குவதற்கான மாற்று வழிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.