Menu

Keeping you Informed News and Views..

சுவிட்சர்லாந்து பற்றி நீங்கள் அறிந்திராத 42 ருசிகர விடயங்கள்

சுவிட்சர்லாந்துக்கான தனித்துவத்தை ஏற்படுத்தும் அம்சங்கள் என்னென்ன, அங்குள்ள கலாச்சாரம், உண்மைகள், வினோதம், கண்டுபிடிப்புகள் என்ன எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

சுவிட்சர்லாந்து சொக்கலேட், கடிகாரங்கள் மற்றும் வங்கிகளுக்கான நாடு என்று எமக்குத் தெரிந்திருக்கும். எனினும் சுவிட்சர்லாந்து பற்றிய கீழ்க்காணும் 42 அம்சங்கள் பற்றி பெரும்பாலும் உங்களுக்குத் தெரிந்திருக்காது. சுவிட்சர்லாந்துக்கான தனித்துவத்தை ஏற்படுத்தும் அம்சங்கள் என்னென்ன என்பதையும் சிறுவர்களை ஏன் சுவிட்சர்லாந்து மிகவும் கவருகிறது என்பதையும் சுவிட்சர்லாந்தின் கலாச்சாரம், உண்மைகள், வினோதம், கண்டுபிடிப்புகள் ஆகியவை பற்றியும் அவற்றை வாசிக்கும்போது உங்களுக்கு தெரிய வரும்.

1. சுவிஸ் மக்கள் காலம் கடந்தே திருமணம் செய்கின்றனர்.

ஐக்கிய நாடுகளின் அறிக்கையொன்றின்படி சுவிஸ் ஆண் ஒருவரின் சராசரி திருமண வயது 31.8 ஆகும். அதே போன்று பெண் ஒருவரின் சராசரி திருமண வயது 29.5 ஆகிறது. மறுபுறம் உள்ளுர் அறிக்கைகளின் பிரகாரம் சுவிட்சர்லாந்தில் விவாகரத்து விகிதம் சுமார் 40% என்று தெரிய வருகிறது. சுவிஸ் பெண் ஒருவர் தனது முதல் குழந்தையை சராசரியாக அவர்களது 30.4 ஆவது வயதில் பெற்றுக் கொள்வதாக மத்திய புலனாய்வு முகவரகத்தின் அறிக்கையொன்று கூறுகிறது. இதன்படி ஐரோப்பாவில் ஆகக்கூடிய வயதில் தனது முதல் குழந்தையைப் பெறும் தாய்மார் சுவிஸ் பெண்கள் ஆவர்.

2. Cern ஆய்வுகூடம் சுவிஸ் எல்லைக்குள்லேயே இருக்கிறது.

உலகின் முன்னணி பௌதிகவியல் ஆய்வு கூடமான Cern சுவிட்சர்லாந்து எல்லையிலேயே உள்ளது. சுவிட்சர்லாந்தில் சர்வதேச மாணவர்களுக்கான பல்கலைக்கழகங்களை தேடுவது சிறப்பான மற்றும் எளிதான விடயமாகும். ஏனெனில் சுவிஸ் பட்டதாரிக் கல்வி பெருமை மிக்கதாகும். அத்துடன் அவை பல்வேறு புலமைப்பரிசில்களை வழங்குகின்றன.

3. பல்கலைக்கழக கல்வி செலவு குறைவானது.

பிரபல்யமான ஜெனிவா பல்கலைக்கழகத்தில் டியூசன் கட்டணம் ஒரு காலாண்டுக்கு 500 CHF மாத்திரமே. அதாவது ஒரு கல்வி ஆண்டுக்கு 1000 CHF என்பதாகும். இந்த கட்டண வரிசை சாதாரணமாகவே பொதுப் பல்கலைக் கழகங்களில் காணப்படுவதாகும். ஆனால் அதிக செலவுடனான தனிப்பட்ட பல்கலைக்கழகங்களையும் நீங்கள் எளிதாக தேடிக் கொள்ளலாம். எது எவ்வாறெனினும் அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளுடன் ஒப்பிடுகையில் சுவிட்சர்லாந்தில் உயர்கல்வி இலாபமாகவே கிடைக்கிறது.

4. சுவிட்சர்லாந்தில் 7000 ஏரிகள் உள்ளன.

Oeschinen Lake, Bernese Oberland, Switzerland

நீங்கள் நீச்சலடிப்பதற்கு விருப்பம் உள்ளவராக இருந்தால் சுவிட்சர்லாந்தில் நீங்கள் தெரிவு செய்ய நல்ல பல ஏரிகள் நிறையவே உள்ளன. 580.03 சதுர கிலோ மீட்டரில் உள்ள ஜெனீவா ஏரி இதில் மிகப் பெரியது. அது பிரான்சுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. அந்த ஏரியின் 40.47 சத வீதம் பிரெஞ்சு பிரதேசத்தில் உள்ளது. அது பிரான்ஸில் லேமன் ஏரி என்று அழைக்கப்படுகிறது. முழுமையாக சுவிட்சர்லாந்துக்குள் உள்ள ஏரி நியூசெட்டல் ஏரிதான். இது 218.3 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஆறுகள் மற்றும் ஏரிகளில் நீர் தெட்டத் தெளிவாக இருக்கும். அதை நீங்கள் கைகளில் அள்ளிக் குடிக்கலாம். ஏரிகளின் அடியைக் காண முடியாமல் இருந்தால் மட்டுமே அது அசுத்தமானது என்று கருத முடியும்.

5. துப்பாக்கிகள் நிறையவே உள்ளன, ஆனால் குறைந்தளவு குற்றச் செயல்கள்.

கைத்தொழில் நாடுகளுக்கிடையே அதிக அளவில் துப்பாக்கிகளை சொந்தமாக வைத்திருப்போர் சுவிட்சர்லாந்திலேயே உள்ளனர். ஆனால் அங்கு குற்றச் செயல்கள் குறைவு. அமெரிக்காவில் இடம்பெறும் துப்பாக்கி தொடர்பான மரணங்களில் அரைவாசி அளவே சுவிட்சர்லாந்தில் இடம்பெறுகின்றன. கைத்தொழில் நாடுகளிடையே ஒப்பிட்டுப் பார்க்கும்போது சுவிட்சர்லாந்து குற்றச் செயல்களின் வீதம் ஆகக் குறைந்த நாடுகளில் ஒன்றாகும்.

சுவிட்சர்லாந்தில் அதிகளவானோர் சொந்தமாக துப்பாக்கிகளை வைத்திருப்பதற்கான காரணம் அங்கு கட்டாய இராணுவ சேவை இருப்பதேயாகும். கட்டாய இராணுவ சேவையில் ஈடுபடுவோர் தமது சேவை முடிந்த பின்னர் தத்தமது ரைபிள் அல்லது பிஸ்டல்களை வீடுகளுக்கு எடுத்துச் செல்லலாம். எனினும் அவற்றுக்கான தோட்டாக்களையும் ரவைகளையும் எடுத்துச் செல்ல முடியாது

6. உலகில் மிகவும் புதுமைகள் மிக்க நாடு

உலகளாவிய The Global Innovation Index சுட்டெண்ணின் படி 2018 ஆம் ஆண்டில் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக உலகில் புதுமைகள் மிக்க நாடு என்ற பெருமையை சுவிட்சர்லாந்து பெற்றுள்ளது.

குறிப்பிட்டுச் சொல்வதானால் Vaud மாகாண அரசின் பொருளாதாரம் பல்வேறு முக்கிய மாற்றங்களை சந்தித்துள்ளது. Observatoire BCV de l’économie Vaudoise என்ற நிறுவனத்தின் ஆய்வொன்றின்படி, 1860 இல் பண்ணை அடிப்படையிலான பொருளாதாரத்தில் நிலைபெற்றிருந்த மேற்படி மாகாண அரசு இப்போது சுவிட்சர்லாந்தின் மிகப் பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. அதிக அளவிலான சேவைகள் துறை, பல்தரப்பட்ட உற்பத்தி அடிப்படை மற்றும் முக்கிய சந்தைகளை நோக்கிய அக்கறை ஆகியவையே இந்த வளர்ச்சிக்கான காரணங்களாகும்.

7. சுவிட்சர்லாந்து மிகவும் சிறிதானது.

Switzerland on the world map

உலக வரைபடத்தில் பார்க்கும் போது சுவிட்சர்லாந்து மிகவும் சிறிய நாடாகும். அது 41,277 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. அதன் மக்கள் தொகை 8.67 மில்லியன்களாகும். அமெரிக்காவின் மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் சுவிட்சர்லாந்தை விட 10 மடங்கு பெரியது. அல்லது வெர்மோன்ட் மற்றும் நிவ் ஹாம்ப்சயர் ஆகிய மாநிலங்களை ஒன்று சேர்த்தால் எந்த அளவு இருக்குமோ கிட்டத்தட்ட அந்த அளவுதான் சுவிட்சர்லாந்தும் இருக்கிறது.

8. 25% மக்கள் வெளிநாட்டவர்கள்.

swissinfo.ch என்ற சேவை குறிப்பிட்டுள்ளவாறு 2015 இல் சுவிட்சர்லாந்து தொடர்பாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி சுவிட்சர்லாந்தில் 24.6% வெளிநாட்டவர் வசிக்கின்றனர். சுவிட்சர்லாந்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் 80% ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களில் அரை வாசிப்பேர் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்த்துக்கலைச் சேர்ந்தவர்கள். 2014 இல் ஆயிரம் பேருக்கு 19 பேர் என்ற சராசரியில் சுவிட்சர்லாந்து மற்றைய ஐரோப்பிய நாடுகளை விட அதிக வெளிநாட்டு குடிவரவினைக் கொண்டிருந்தது. மற்றைய நாடுகளில் இந்த குடிவரவு சராசரி ஜெர்மனி (11), ஐக்கிய ராஜ்ஜியம் (9.8), ஸ்பெயின் (6.6), பிரான்ஸ் (5.1) என்ற அளவில் உள்ளது.

9. அதி உயர்ந்த வாழ்க்கை தரத்தை கொண்ட நாடுகளில் ஒன்று.

உலகில் அதிக செலவு மிகுந்த நகரங்கள் சில சுவிட்சர்லாந்தில் உள்ளன. ஆனால் அங்கு உள்ள மக்கள் பணத்துக்கு ஏற்ற பெறுமதியை பெறுகின்றனர். சமூக முன்னேற்ற அறிக்கையின் படி ‘மருத்துவம்’, ‘போஷாக்கு’, ‘அடிப்படை அறிவைப் பெறுவதற்கான சந்தர்ப்பம்’ ஆகியவையே அந்தப் பெருமைக்கு காரணமாகும். வாழ்க்கை தரத்துக்கான 100 புள்ளிகள் சுட்டெண்ணில் சுவிட்சர்லாந்து 88.87 புள்ளிகளைப் பெறுகிறது.

10. ஐரோப்பிய நாடுகளில் பருமன் குறைந்தவர்கள் உள்ள நாடு.

சுவிட்சர்லாந்து வசிப்பதற்கு நல்ல இடம் என்று கூறுவதற்கு மற்றொரு காரணம் அங்கு உள்ளவர்கள் பருமனாக இல்லாமல் தகுந்த உடற்கட்டுடன் இருப்பதாகும். உலக சுகாதார அமைப்பின்படி ஐரோப்பிய நாடுகளில் பருமன் குறைந்தவர்களை அதிமாகக் கொண்ட நாடு சுவிட்சர்லாந்து ஆகும். அங்குள்ளவர்களில் 17.5% பருமனானவர்கள் ஆவர். நீங்கள் அமெரிக்காவில் இருந்தால் நீங்கள் பருமனாக இருப்பதற்கான சாத்தியம் அங்கு இரண்டு மடங்கு அதிகம். ஏனெனில் அமெரிக்காவில் பருமனாக இருப்பவர்களின் எண்ணிக்கை மொத்த சனத் தொகையில் 33% ஆகும்.

11.வசிப்பதற்கு மிகவும் செலவு மிக்க இடங்களில் ஒன்று.

Francs in a wallet (KEYSTONE/Christian Beutler)

உலகளாவிய வாழ்க்கை செலவு ஆய்வு மற்றும் Mercer வாழ்க்கை செலவு ஆய்வு ஆகியவற்றின்படி உலகில் அதிக செலவுடன் கூடிய மூன்றாவது நகரம் சூரிச் ஆகும். அத்துடன் சூரிச் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாகாண அரசு ஆகும். சூரிச்சின் சனத் தொகை 4,02,762 ஆகும். அங்கு சராசரியான வீட்டு விலை சதுர கிலோ மீட்டருக்கு CHF 13,000 ஆகும் (13,036 அமெரிக்க டொலர்). அதே நேரம் சராசரி மாதாந்த வீட்டு வாடகை மூன்று படுக்கையறைகளைக் கொண்ட அடுக்கு மாடி தொகுதிக்கு CHF 2,324 ஆகும். எவ்வாறெனினும் சராசரி சம்பளம் CHF 1,03,296 என்பதால் விலைவாசி அதிகம் என்று குறை சொல்ல முடியாது.

12. உலகில் வசதியுடன் வாழக்கூடிய இரண்டு நகரங்கள்.

உலகளாவிய ரீதியில் சிறந்த அல்லது மோசமான வாழ்க்கை நிலையானது ஆரோக்கியம், கலாச்சாரம், சூழல், கல்வி, உட்கட்டமைப்பு ஆகிய 5 பரந்துபட்ட அம்சங்களின் கீழ் அமைகிறது. இந்த வகையில் உலகில் வசதியுடன் வாழக்கூடிய இரண்டு நகரங்களாக சூரிச், ஜெனிவா ஆகிய இரண்டு நகரங்கள் கருதப்படுகின்றன.

13. இது ஓரு நோபல் பரிசு இயந்திரம் 

சுவிட்சர்லாந்து அதன் வங்கிகளுக்கு மட்டும் பேர் போனதல்ல. கல்விசார் துறையிலும் அது உலகளாவிய புகழ் பெற்றது. சுவிஸ் பல்கலைக்கழகங்கள் ஏராளமான நோபல் பரிசு பெற்றவர்களையும் உருவாக்கியுள்ளன. இவ்வாறு நோபல் பரிசு பெற்றவர்களில் பலர் விஞ்ஞானிகளாவர்.

14. சுவிஸ்காரர்கள் நிறையக் குடிப்பார்கள்

சுவிஸ் மக்கள் ஒவ்வொவரும் வருடம் ஒன்றுக்கு 36 லீட்டர் வைன், 56.5 லீட்டர் பியர், 8.4 லீட்டர் மதுவை அருந்துவார்கள். புள்ளி விபரங்களைப் பொறுத்தவரை தற்போது குடிப்பது குறைந்து வருவதாக தெரிகிறது. சுவிஸ் மக்களில் சுமார் 20% மாதமொரு முறையாவது ஒன்றுகூடி குடிப்பது வழக்கமாகும்.

இதன் காரணமாக சுவிட்சர்லாந்தில் ஒவ்வொரு வருடமும் 1600 பேர் வரையில் மது தொடர்பான நோய்களால் மரணமடைகின்றனர். இதில் சில மது அருந்தியதால் ஏற்படும் விபத்துகளினால் ஏற்படுகின்றன. மற்றவை அதிக குடி காரணமாக ஈரல் நோய் ஏற்படுவதால் இடம் பெறுகின்றன. சுவிட்சர்லாந்தில் சுமார் 2,50,000 மதுப் பிரியர்கள் உள்ளனர். இது மொத்த சனத்தொகையில் 3% ஆகும்.

15. அவர்களுக்கு நான்கு தேசிய மொழிகள் உள்ளன.

சுவிஸ்காரர்களுக்கு பிரெஞ்சு(20.4% பாவனை), ஜெர்மன் (64% பாவனை), இத்தாலியன் (6.5% பாவனை), ரோமன் (1% இற்கு கொஞ்சம் கூடுதலான பாவனை) என நான்கு தேசிய மொழிகள் உள்ளன.

16. சுவிஸ்காரர்களின் ஆயுட் காலம் அதிகம்

ஐரோப்பாவில் 100 வயதுக்கு மேற்பட்டோர் அதிகமாக வசிக்கும் நாடு சுவிட்சர்லாந்து ஆகும். உலகளாவிய ரீதியில் ஜப்பானையடுத்து இவ்விடயத்தில் சுவிட்சர்லாந்து இரண்டாவது இடம் பிடிக்கிறது. சுத்தமான காற்று, நடப்பதற்கு நிறைய இடங்கள், அதிக தரத்துடனான சுகாதார சேவை ஆகியவையே ஆயுட்கால அதிகரிப்புக்கு காரணமாகும்.

17. அல்ப்ஸ் மலையின் 15% இற்கு குறைவான பகுதி சுவிட்சர்லாந்துக்கே உரியது.

சுவிட்சர்லாந்துக்கான எந்தவொரு சுற்றுலாவிலும் அல்ப்ஸ் மலை பெரும்பாலும் இடம்பெறும். எனினும் அல்ப்ஸ் மலையின் 15% இற்கு குறைவான பகுதியே சுவிட்சர்லாந்தில் உள்ளது. சுவிஸ் மக்கள் அல்ப்ஸ் மலையுடன் நெருங்கி டர்புபட்டுள்ளனர்.

18. வேலையில்லாதோர் எண்ணிக்கை குறைவு.

2017 இல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி சுவிட்சர்லாந்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை சுமார் 4.8% மாத்திரமே. சுவிட்சர்லாந்து வளமும் ஸ்திரமான பொருளாதார நிலையையும் கொண்டிருப்பதன் காரணமாகவே அங்கு வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அங்கு வேலை செய்பவர்களில் அநேகமானோர் உயர்மட்ட கல்வித் தரத்துடனும் குறிப்பிட்ட தொழில்களில் விசேடம் பெற்றவர்களாகவும் இருப்பதால் நல்ல தொழில்களையும் உயர்ந்த சம்பளத்தையும் பெற முடிகிறது. இதனால் நாட்டில் உற்பத்தித் திறனுக்கும் செயல் திறனுக்கும் உத்தரவாதம் கிடைக்கிறது.

19. அதிக சம்பளத்துடன் தொழில் பாதுகாப்பு.

சுவிட்சர்லாந்தின் பொருளாதார ஸ்திர நிலை காரணமாக சுவிஸ் மக்கள் சராசரியாக உலகின் மற்றைய இடங்களில் உள்ள மக்களிடம் இருப்பதை விட அதிக பணப் புழக்கத்துடன் உள்ளனர். அவர்களிடம் அமெரிக்க மக்களிடம் இருப்பதை விட அதிக பணம் புழங்குகிறது. பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி அமைப்பு நாடுகளில் மூன்றாவது அதிக சம்பளம் மற்றும் தொழில் பாதுகாப்பு சுவிட்சர்லாந்திலேயே உள்ளது.

20. சுவிட்சர்லாந்தில் 208 மலைகளுடன் ஐரோப்பாவின் உயர்ந்த மலைகளும் உள்ளன.

மூவாயிரம் மீட்டருக்கு மேல் உயரமான பல மலைகள் சுவிட்சர்லாந்தில் உள்ளன. 12 நாட்கள் இடம்பெறும் அல்ப்ஸ் பயணத்தின்போது பிரபலமான Matterhorn மலைக்கும் நீங்கள் செல்ல முடியும். ஐரோப்பாவில் உள்ள மற்றெந்த நாடுகளையும் விட சுவிட்சர்லாந்தில் 4 ஆயிரம் மீட்டருக்கு மேல் உயரமான 48 மலைகள் உள்ளன.

21. உதவியுடன் கூடிய தற்கொலை சட்ட பூர்வமானது. தற்கொலை சுற்றுலாப் பயணிகளை இது கவர்கிறது.

சுவிஸ் சட்டத்தின்படி மனநிலை சரியில்லாதவர்கள், நீண்ட காலமாக தமது உயிரை மாய்த்துக் கொள்ள விரும்புவோர் அதற்கான உதவியுடன் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள முடியும். ஆனால் அவர்கள் தாங்களாகவே மருந்துகள் மூலம் உயிர் துறக்க வேண்டும்.
இது தற்கொலைச் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்கிறது. தற்கொலை செய்து கொள்வதற்கென்றே இவர்கள் சுவிட்சர்லாந்துக்கு, குறிப்பாக சூரிச் மாகாண அரசுக்கு வருகின்றனர். 2015 ஆம் ஆண்டு இவ்வாறு அதிகாரபூர்வமாக தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை 956 (426 ஆண், 539 பெண்) ஆகும். 2003 இல் இது 187 ஆக இருந்தது. அனைத்து மரணங்களுடனும் ஒப்பிடும்போது இவ்வாறான தற்கொலை மரணங்கள் குறைவாகவே இருந்த போதிலும் அவை தற்போது அதிகரித்து வருவதாக தெரிய வருகிறது. இவ்வாறான மரணங்களுக்கான செலவு இறுதிச் சடங்கு இன்றி 7500 CHF என்றும் இறுதிச் சடங்குடன் 10,500 CHFகு என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும்.

22. அனைத்து மரணங்களிலும் மூன்றில் ஒன்று இருதய நோயினால் ஏற்படுகிறது.

மத்திய புள்ளி விபர அலுவலகத்தின் மரணங்கள் தொடர்பான ஆய்வில் சுவிட்சர்லாந்தில் 2013 ஆம் ஆண்டு இடம் பெற்ற அனைத்து மரணங்களிலும் 21,512 மரணங்கள் இருதய நோய்கள் மூலமே ஏற்பட்டதாக தெரிய வருகிறது. எனினும் 20 வருட காலத்துக்கு முன்னர் 41% ஆக இருந்த அந்த இந்த எண்ணிக்கை தற்போது குறைந்து வருவதாக தெரிகிறது. 2013 இல் புற்று நோய் காரணமாக 26% மரணங்கள் ஏற்பட்டுள்ளன. அதே நேரம் கடந்த 40 வருடங்களாக ஈரல் புற்று நோயே மோசமாக இருந்துள்ளது. 2013 இல் ஈரல் புற்று நோய் காரணமாக 3,200 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் மூத்தவர்களின் எண்ணிக்கை காரணமாக பல மரணங்களுக்கு முதுமையில் வரும் நோய்கள் காரணமாகியுள்ளன. 2013 இல் கிட்டத்தட்ட 6,000 மரணங்களுக்கு முதுமையில் வரும் நோய்கள் நேரடி காரணமாகியுள்ளன. 1995 இல் அந்த எண்ணிக்கை 2.100 ஆக இருந்தது.

23. சுவிஸ் இறைச்சி உலகிலேயே அதிக விலை கொண்டது.

சுவிட்சர்லாந்தில் இறைச்சி விலை சராசரி ஐரோப்பிய விலையை விட 124% அதிகமானது. அரைக் கிலோ (500 கிராம்) இறைச்சியின் விலை CHF 12 முதல் 14 வரையாகும். வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் உணவுப் பொருட்களுக்கான அதிக வரி அதிகரிப்பானது உள்ளுர் விவசாயிகளை பாதுகாக்கிறது.

24. வறுமையில் இருப்போரின் எண்ணிக்கை குறைவாகும்.

சுவிட்சர்லாந்தில் 5,30,000 பேர் வறுமைக் கோட்டின் கீழ் இருப்பதாக தெரிய வருகிறது. இது மொத்த சனத் தொகையில் 6.6% ஆகும். 2007 இல் இது 9.3% ஆக இருந்தது. தனி ஒருவருக்கு மாதாந்தம் CHF 2,219 மற்றும் இரண்டு பெரியவர்கள் இரண்டு சிறுவர்கள் என்ற சிறு குடும்பத்துக்கு மாதாந்தம் CHF 4,031 என்ற வருமானம் இங்கு கணிப்பாக உள்ளது.

இதே நேரம் 4.6% மக்கள் ஆகக் கூடிய வறுமையில் உள்ளனர். இது ஐரோப்பாவின் ஆகக் குறைந்த சராசரியாகும் (18.6%). சுவிஸ் மக்களில் 9.7% வெளிநாட்டில் ஒரு வார கால சுற்றுப்பயணத்தைக் கூட மேற்கொள்ள முடியாமல் உள்ளனர். ஐரோப்பாவில் இவ்வாறானவர்களின் சராசரி 36.9 ஆகும்.

25. காப்பிக்காக அதிகம் செலவாகும் ஐந்து நகரங்கள்.

Geneva, Bern, Basel, Zurich.

Starbucks என்ற பிரபல காப்பிச்சேவையின் புள்ளி விபரங்களின் படி உலகில் காப்பிக்காக அதிக கட்டணம் அறவிடப்படும் நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்று. காபிக்கு பேர் போன பிரேசிலில் 1.21 டொலருக்கு விற்கப்படும் Grande Latte காப்பி சுவிட்சர்லாந்தில் 5.72 டொலர்களுக்கு விற்கப்படுகிறது. இது 400% அதிகரிப்பாகும்.

26. அணு யுத்தத்துக்கு சுவிட்சர்லாந்து தயாராகவே உள்ளது.

அணுக்கசிவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உறைவிடங்கள், கட்டடங்கள் இருக்க வேண்டும் என்று சர்வதேச சட்டம் கூறுகிறது. இதன்படி சுவிஸ் இராணுவம் மக்கள் அதிகமாக வசிக்கும் கிராமங்களில் அணுக் கசிவை தாங்கிக் கொள்ளும் வகையில் கிராமப்புற வீடுகளைப் போல் தோற்றமளிக்கும் பங்கர்களை அமைத்து வைத்துள்ளது.

27. கடிகாரங்களுக்கான இடம்.

Swatch, a Swiss watch

1541 இல் Calvinists ஆபரணங்களின் பாவனையை தடை செய்தபோது ஜெனிவாவில் இருந்த பொற்கொல்லர்கள் கடிகாரங்களை அறிமுகப்படுத்தினர். அன்று முதல் கடிகாரத் தயாரிப்பு நாட்டின் வெற்றிகரமான ஒரு கைத்தொழிலாக மாறிவிட்டது. இப்போது அக்கைத்தொழில் சுவிட்சர்லாந்தின் நான்காவது பெரிய ஏற்றுமதித் துறையாக உள்ளது.

28. சாக்கலெட்டுகளை தயாரிப்பதிலும் உண்பதிலும் முன்னணி இடம்.

Lindt, a renowned Swiss chocolate brand

சர்வதேச ரீதியில் உயர்ந்த தரத்துடன் கூடிய சாக்கலேட்களுக்கு சுவிட்சர்லாந்து பேர் போன இடம். அங்கு எவ்வளவு சாக்லெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன என்று தெரியுமா? அங்கு வருடாந்தம் 1,80,000 தொன் சாக்லெட்டுகள் தயாரிக்கப்படுவதுடன் ஒவ்வொருவரும் 11 கிலோ சாக்லட்டுகளை சாப்பிடுகின்றனர். ஒரு சாக்லெட் ரயில் கூட அங்கு இருக்கிறது.

29. சூழல் நட்புடன் கூடியது.

Source: swissinfo.ch “Recycling and composting in Switzerland (DFAE)”

கழிவுப் பொருட்களை மீள் சுழற்சிக்கு உட்படுத்துவதில் சுவிட்சர்லாந்து உலகில் முன்னணி இடத்தில் உள்ளது. பொருட்களை வெவ்வேறாகப் பிரித்து மீள் சுழற்சிக்கு உட்படுத்தும் அதே நேரம் மிகுதியை எரிசக்தியாக மாற்றிவிடுகின்றனர். அத்துடன் தனது மக்களுக்கு தேவையான CO2 உடன் கூடிய அனைத்து மின்சாரத்தையும் சுவிட்சர்லாந்து வழங்குகிறது. அத்துடன் 2011 முதல் அணு சக்தியினாலான மின்சாரத்தை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

30. செஞ்சிலுவையின் பிறப்பிடம்.

Source: Unsplash; Left: Red Cross Flag, Right: The Swiss Flag

சுவிட்சர்லாந்தின் கொடியில் செஞ்சிலுவையின் அடையாளம் இடம்பெற்றமை தற்செயலான நிகழ்வு அல்ல. சுவிட்சர்லாந்தின் கொடியில் ஏற்படும் நிற மாற்றமே செஞ்சிலுவை கொடியாக மாறி விடுகிறது. அது சுவிட்சர்லாந்துக்கு பெருமை தருவதாக உள்ளது. செஞ்சிலுவை சங்கம் 1863 இல் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. செஞ்சிலுவை சங்கத்தில் தற்போது 97 மில்லியன் தொண்டர்கள் உள்ளனர்.

31. LSD போதை வஸ்து முதன் முதல் சுவிஸ் இரசாயனவியலாளரால் தயாரிக்கப்பட்டது.

சுவிஸ் இரசாயனவியலாளர் Albert Hofmann நவம்பர் 16 1938 இல் Basel நகரின் ஆய்வு கூடமொன்றில் LSD என்ற போதை வஸ்துவை பகுப்பாய்வு செய்தார். 1943 இல் அவர் ஒற்றைத் தலைவலிக்கு மருந்தொன்றை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் LSD என்ற போதை வஸ்துவை முதல் முறையாக சோதித்துப் பார்த்தார். சுவிட்சர்லாந்தில் வருடாந்தம் 6 லட்சம் பேர் 100 தொன் hash மற்றும் marijuana ஆகிய போதை வஸ்துக்களை பாவித்து வருகின்றனர்.

32. நீங்கள் விரும்பும் வகையில் உங்கள் குழந்தைக்கு பெயர் வைக்க முடியாது.

சுவிட்சர்லாந்தில் ஒரு குழந்தையின் அக்கறையை பாதிக்கும் வகையிலான பெயர்களை வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சுவிஸ் இசையமைப்பாளர் Christine Lauterburg தனது மகளைLexicon என்று அழைப்பதை அதிகாரிகள் தடை செய்துள்ளனர். அது ஒரு பெயர் அல்ல. அது ஒரு பொருள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

33. சுவிட்சர்லாந்தின் Gotthard சுரங்கம் உலகிலேயே நீளமானது.

சுவிட்சர்லாந்தின் Gotthard சுரங்கம் 57 கிலோ மீட்டர் நீளமானது. உலகிலேயே நீளமான சுரங்கம் இதுதான். இங்கிலாந்து – பிரான்ஸ் சுரங்கத்தை விட இது 7 கிலோ மீட்டர் அதிக நீளத்தைக் கொண்டது. இந்த சுரங்கத்தை கட்டி முடிக்க 17 ஆண்டுகள் சென்றன.

34. ஐன்ஸ்டீனின் மிகப் பிரபலமான சூத்திரத்தின் தாய் வீடு இதுதான்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவரது E=MC2 என்ற பிரபலமான சூத்திரத்தை சுவிட்சர்லாந்தில்தான் மேம்படுத்தினார். Bern நகரில் படித்துக் கொண்டிருந்தபோதுதான் அவர் அதனை மேம்படுத்தினார். கட்டாய இராணுவ சேவையை தவிர்க்கவே அவர் ஜெர்மன் பிரஜா உரிமையை நிராகரித்திருந்தார்.

35. ஐரோப்பாவின் உயரமான ரயில் நிலையம் சுவிட்சர்லாந்தில் உள்ளது.

Jungfraujoch, Bernese Alps, Switzerland

ஐரோப்பாவின் உயரமான ரயில் நிலையம் சுவிட்சர்லாந்தின் Jungfraujoch மலை உச்சியில் 3454 மீட்டர் உயரத்தில் உள்ளது.

36. உலகின் நீளமான படிக்கட்டு சுவிட்சர்லாந்தில் உள்ளது.

Niesenbahn Funicular Railway, Spiez, Switzerland
Source: interlanken.ch

உலகின் நீளமான இந்த படிக்கட்டு 11,574 படிகளுடன் 5,476 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அது பொது மக்களுக்காக திறக்கப்படவில்லை. எனினும் பொது மக்கள் அதனை வருடத்தில் ஒரு முறை பார்வையிடலாம்.

37. கணிதம் மற்றும் விஞ்ஞானத்தில் சிறப்பான நாடு.

பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி அமைப்பின் புதிய அறிக்கையின்படி மாணவர்களின் கணித மற்றும் விஞ்ஞான பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் அமைந்த நாடுகள் வரிசையில் சுவிட்சர்லாந்து 8 ஆம் இடத்தில் உள்ளது.

38. சூடான காற்று பலூன்கள் விழா.

ஓவ்வொரு ஜனவரி மாதத்திலும் Vaud Alps இல் உள்ள Château-d’Oex என்ற இடத்தில் சூடான காற்று பலூன்கள் விழா 9 நாட்களுக்கு இடம்பெறும். இது 1979 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு நாள் சிறுவர்களுக்கென ஒதுக்கப்படும். பல கார்டூன் கதாபாத்திரங்களில் பலூன்கள் உருவாக்கப்படுவதுடன் அங்கு களியாட்ட விழாவும் நடைபெறும்.

39. Heidiland இன் தாய்வீடு.

எழுத்தாளர் Johanna Spyri அவரது ‘Heidi’ நாவல்களான “Heidi: Her Years of Wandering and Learning” மற்றும் “Heidi: How She Used What She Learned.” ஆகியவற்றை 1881 இல் வெளியிட்டபோது அவற்றில் இடம்பெற்ற இடங்களை பின்பற்றி Maienfeld என்ற கற்பனை கிராமம் உண்மையாகவே உருவாக்கப்பட்டுள்ளது. வினோத விரும்பிகள் அங்கு சென்று பொழுதைக் கழிக்கலாம்.

40. உலகின் உயரமான புவியீர்ப்பு அணைக்கட்டு அல்ப்ஸில் உள்ளது.

Grande Dixence உலகின் உயரமான புவியீர்ப்பு அணைக்கட்டு ஆகும். இது அல்ப்ஸ் மலையில் உள்ளது. 285 மீட்டர் உயரமும் 15 மில்லியன் தொன் நிறையும் கொண்ட இந்த அணைக்கட்டு 400 பில்லியன் லீட்டர் நீரை தேக்கி வைக்கக்கூடியது. எகிப்தின் பெரிய பிரமிட்டை விட இந்த அணைக்கட்டு பாரமானது.

41. ஞாயிற்றுக்கிழமைகள் புனிதமானவை.

சுவிட்சர்லாந்தில் ஞாயிற்றுக்கிழமைகள் புனிதமானவை. அன்றைய தினத்தில் புல் செதுக்குதல், கழுவிய துணிகளை வெளியே காயப் போடுதல், சுத்தியலால் தட்டுதல் அல்லது அண்டை வீட்டாருக்கு கேட்கும் வகையில் சத்தம் எழுப்புதல், அண்டை வீட்டார் பார்க்கும் வகையில் அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் எவரும் இறங்கக்கூடாது. அன்றைய தினம் கதவை மூடிக் கொண்டு வீட்டுக்குள் இருந்து குடும்பத்துடன் அமைதியாக காலத்தை கழிக்க வேண்டும்.

42. நாய் வளர்ப்பதற்கு சட்டங்கள் உண்டு.

சுவிட்சர்லாந்து மிருகங்களை மிகவும் நேசிக்கும் நாடு. உங்கள் நாயை நீங்கள் உணவுச் சாலை மற்றும் கடைகளுக்கு என்று போகுமிடமெல்லாம் கூட்டிச் செல்லலாம். எவ்வாறெனினும் உங்கள் செல்லப் பிராணிகளுக்காக நீங்கள் வரி செலுத்த வேண்டும். (சில மாகாண அரசுகளில் நாய்களின் அளவு மற்றும் நிறையின் பிரகாரம்). அத்துடன் நாய்கள் அன்றாடம் தேகாப்பியாசம் செய்ய வேண்டும். மனிதர்களுடன் அன்றாடம் தொடர்புபட்டிருக்க வேண்டும், மிருக வைத்தியர் ஒருவரினால் மைக்ரோசிப் போடப்பட்டிருக்க வேண்டும் என்றும் சட்டங்கள் உண்டு.

Share

விமானப் பயண கால தாமதத்தினால் ஶ்ரீலங்கன்...
கோசோவோவில் சுவிஸ் அமைதி காக்கும் படையினர்...
உக்ரைனுக்கான இராணுவ உதவி அதிகரிக்கப்படும் –...
தனியார் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் சாத்தியம்
சீனாவிற்கு எதிராக தடை விதிக்கப் போவதில்லை
சுவிட்சர்லாந்தில் வீதி போக்குவரத்து சட்டங்களில் மாற்றம்
காலநிலை மாற்றம் தொடர்பில் சுவிஸில் பாரிய...
ஈரான் மீது தடைகளை விதிக்கும் சுவிட்சர்லாந்து