சுவிட்சர்லாந்தின் அநேகமான பிரதான நகரங்களிலும் வேகக் கட்டுப்பாடு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
எதிர்வரும் தசாப்தத்தில் இந்த வேகக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
மணிக்கு 30 கிலோ மீற்றர் வேகம் என்ற கட்டுப்பாடு பிரதான நகரங்கள் அனைத்திலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
வீதிப் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு இந்த வேக கட்டுப்பாடு அவசியமானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விபத்து தடுப்பு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் சுமார் 600 பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பின்னர் இந்த பரிந்துரை செய்யப்படடுள்ளது.
இதன்படி, வேகக் கட்டுப்பாடு மணிக்கு 30 கிலோ மீற்றர் என்ற நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளது.