Search

Menu

Keeping you Informed News and Views..

சுவிஸின் முக்கிய நகரங்களில் வேகக் கட்டுப்பாடு அமுல்படுத்த திட்டம்

சுவிட்சர்லாந்தின் முக்கிய நகரங்களில் வேகக் கட்டுப்பாடு அமுல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சுவிஸின் முக்கிய நகரங்களில் வேகக் கட்டுப்பாடு அமுல்படுத்த திட்டம்

சுவிட்சர்லாந்தின் முக்கிய நகரங்களில் வேகக் கட்டுப்பாடு அமுல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டின் அநேகமான முக்கிய நகரங்களில் எதிர்வரும் ஆண்டுகளில் வேகக் கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

எதிர்வரும் 2030ம் ஆண்டளவில் சுவிட்சர்லாந்தின் பெரிய கான்டனான சூரிச்சின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் மணிக்கு 30 கிலோ மீற்றர் என்ற வேகக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட உள்ளது.

இது தொடர்பில் கடந்த டிசம்பர் மாதம் கான்டன் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தற்பொழுது பிரதான நகரங்களில் நகர எல்லைப் பகுதிகளில் வேக எல்லை மணிக்கு 50 கிலோ மீற்றராக காணப்படுகின்றது.

எதிர்வரும் பத்தாண்டு காலப் பகுதியில் இந்த வேகக் கட்டுப்பாடு வெகுவாக குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பானதாகவும், பாதசாரிகளுக்கு சௌகரியமானதுமான வகையில் இந்த வேகக் கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வேகக் கட்டுப்பாட்டை மீறி வாகனம் செலுத்துவோருக்கு எதிராக அபராதம் விதிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நிர்ணயிக்க்ப்பட்ட வேகத்தை விடவும் ஐந்து முதல் பத்து கிலோ மீற்றர் வரையில் வேகமாக வாகனம் செலுத்தினால் 40 முதல் 120 பிராங்குகள் வரையில் அபராதம் விதிக்கப்படும் என்பதுடன், 15 கிலோ மீற்றருக்கு மேல் என்றால் அபராதத் தொகை 250 பிராங்குளாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here