Search

Menu

Keeping you Informed News and Views..

சுவிஸில் இடம்பெறவிருந்த குண்டுத் தாக்குதலை தடுத்த ஜெர்மன் பொலிஸார்

சுவிட்சர்லாந்தின் பிரதான நகரமொன்றில் இடம்பெறவிருந்த குண்டுத் தாக்குதலை ஜெர்மன் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சுவிட்சர்லாந்து பிரஜைகளையும் ஜெர்மன் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

24 மற்றும் 26 வயதுடைய இரண்டு சுவிட்சர்லாந்து பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜெர்மனியின் ஸ்டுடாகார்ட்டில் இந்த இருவரும் வெடிபொருட்களை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுவிட்சர்லாந்தின் பிரதான நகரமொன்றில் குண்டுத் தாக்குதல் நடாத்த இந்த இருவரும் திட்டமிட்டிருந்தனர் என ஜெர்மனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் அரசியல் காரணிகள் எதுவும் இருப்பதாக தென்படவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த இரண்டு நபர்கள் தொடர்பில் இந்த மாத ஆரம்பம் முதல் ஜெர்மனிய அதிகாரிகள் கண்காணிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here