சுவிட்சர்லாந்தின் ஆர்கெவ் கான்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆர்கெவ் கான்டனின் வெட்டிங்ஜென் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெட்டிங்ஜென்னில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் இரண்டு பேர் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.
63 வயதான ஆண் ஒருவரும், 57 வயதான பெண் ஒருவரும் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.
57 வயதான பெண் குறித்த ஆண் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதன் பின்னர் அந்தப் பெண் தனக்கு தானே துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணி என்ன என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.