சுவிட்சர்லாந்தில் இரண்டாவது குரங்கம்மை நோயாளியும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெனீவாவைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு குரங்கம்மை நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.
நோய்த் தொற்றுக்கு இலக்காகியவர் வெளிநாடு சென்று திரும்பிய நபர் ஒருவர் என கான்டன் சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.
நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளதாகவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
குறித்த நபருடன் தொடர்பு பேணியவர்களை கண்டறியும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே சுவிட்சர்லாந்தின் பேர்ன் கான்டனில் குரங்கம்மை நோயாளி ஓருவர் பதிவாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் சுமார் 100 குரங்கம்மை நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தில் பதிவாகிய இரண்டு குரங்கம்மை நோயாளிகளும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு நாடு திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.