சுவிட்சர்லாந்தில் கஞ்சா போதைப் பொருள் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.
சூரிசசில் இவ்வாறு கஞ்சா போதைப் பொருள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது.
இந்த ஆண்டின் இறுதியில் பரீட்சார்த்த அடிப்படையில் கஞ்சா போதைப் பொருள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது.
சுவிட்சர்லாந்தின் சுகாதாரத்துறை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
நிபந்தனை அடிப்படையில் கஞ்சாப் போதைப் பொருளை நுகர்வு மற்றும் மருத்துவ தேவைக்காக பயன்படுத்துவதற்கு மத்திய சுகாதார அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த ஒக்ரோபர் மாதம் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போது சுகாதார அலுவலகம் அனுமதி வழங்கியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.