சுவிட்சர்லாந்தில் கடுமையான ஆளணி வள தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக நாட்டில் தகுதி வாய்ந்த தொழில் வல்லுநர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
செட் கேலன் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு நீண்ட நாட்களாக சில பதவி வெற்றிடங்கள் நிரப்பப்படாதுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
தகுதி வாய்ந்த ஆளணி வளத்தை பெற்றுக் கொள்வதில் கடும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் சுவிட்சர்லாந்து தொழிற்சந்தை சவால்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பற்றாக்குறையில் காரணமாக நிலவிவரும் இடைவெளி நாட்டின் மொத்த தேசிய பாதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.