சுவிஸில் பசு மாடுகளின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வரலாறு காணாத அளவில் பசு மாடுகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் நாட்டின் மொத்த மாடுகளின் எண்ணிக்கை 514496 என பதிவாகியுள்ளது.
இது கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது மாடுகளின் எண்ணிக்கை பதினோராயிரத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளது.
விவசாய தகவல் சேவை நிறுவனம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக பால் உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பெரும் தொற்று மற்றும் பணவீக்க நிலைமைகளால் இவ்வாறு பால் உற்பத்தி குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாடுகளுக்கான தீவனங்கள் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டதாகவும் இது பால் உற்பத்தியை பாதித்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.