சுவிட்சர்லாந்தில் மின்சாரம் தடைப்பட்டால் சுரங்கப் பாதைகள் முடங்கும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதிக மலைகளைக் கொண்ட சுவிட்சர்லாந்தில் சுமார் 1300 சுரங்கப் பாதைகள் காணப்படுகின்றன.
அநேகமான பகுதிகளில் பயணம் செய்யும் போது இந்த சுரங்கப் பாதைகளை கடக்க நேரிடுகின்றது.
இவ்வாறான ஓர் பின்னணியில் மின்சாரம் முழுமையாக தடைப்பட்டால் சுரங்கப் பாதைகளை முடக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு முடக்கப்பட்டால் சில முக்கியமான பாதைகளில் பாதிப்பு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
சுரங்கப் பாதைகளில் அவசர தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடிய பற்றரி வசதிகள் காணப்படுவதாகவும் நீண்ட நேரத்திற்கு இவ்வாறு பற்றரிகளை பயன்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.