சுவிட்சர்லாந்து ஆய்வாளருக்கு ஐரோப்பாவில் வழங்கப்படும் விசேட விருது வழங்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மாதியா டிரோஸிக்கு ஐரோப்பாவின் கண்டுபிடிப்பாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதினை மாதியாவுடன் பிரெஞ்சு ஆய்வாளரான எலொடி பெனோக்யூவும் பெற்றுக்கொள்கின்றார்.
ஐரோப்பிய கண்டு பிடிப்பாளர் விருது இவ்வாறு குறித்த இரண்டு விஞ்ஞானிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி தொடர்பான கண்டுபிடிப்பிற்காக இவ்வாறு விருது வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு புற்று நோய்களுக்கு இந்த தடுப்பூசியை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய வகையில் இந்த தடுப்பூசி மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சத்திர சிகிச்சை போன்ற ஏனைய சிகிச்சை முறைகளுடன் புற்று நோயாளிகளுக்கு இந்த தடுப்பூசி சிகிச்சைகளையும் அளிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.