சுவிட்சர்லாந்தில் ஓய்வூதியும் பெற்றுக்கொள்வோர் தங்களது நிதி நிலைமைகள் குறித்து திருப்தியுடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தின் முன்னணி காப்புறுதி நிறுவனமான சுவிஸ் லைப் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் ஓய்வு பெற்றுக்கொண்ட மூன்றில் இரண்டு வீதமானவர்கள் தங்களது நிதி நிலைமை குறித்து திருப்தி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
65 வயதுக்கும் மேற்பட்ட 73 வீதமானவர்கள் தங்களது நிதி நிலைமை குறித்து மிகவும் திருப்தியுடன் வாழ்ந்து வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், 20 வீதமான ஓய்வு பெற்றுக் கொண்டவர்கள் தங்களது நிதி நிலைமை குறித்து திருப்தி இல்லை எனவும், சேமிப்பினை பயன்படுத்த நேரிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.