Search

Menu

Keeping you Informed News and Views..

சுவிஸ் தடகள வீரர் ஊக்கமருந்து தடையால் ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தார்

ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானதால் ஜூலை 16 அன்று சுவிஸ் ஒலிம்பிக் அமைப்பால் அவருக்கு ஒன்பது மாத தடை விதிக்கப்பட்டது.

சுவிஸ் தடகள வீரர் ஊக்கமருந்து தடையால் ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தார்

சுவிஸ் தடகள வீரர் கரீம் ஹுசைன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார். ஊக்கமருந்து தடையை ரத்து செய்வதற்கான கடைசி முயற்சியில் அவர் தோல்வியுற்றார்.

ஒலிம்பிக் போட்டி ஆரம்ப நாளில் சுவிஸ் தடகளத்தால் இந்த தீர்ப்பு பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. ஜுன் மாதம் எடுக்கப்பட்ட சோதனைகளில் ஹுசைன் nikethamide மற்றும் N-ethylnicotinamide ஆகிய ஊக்கமருந்துகளைப் பயன்படுத்தியமை உறுதிப்படுத்தப்பட்டது.

குறித்த ஊக்கமருந்துகள் பயிற்சியின்போது பயன்படுத்த அனுமதிக்கப்பட்டாலும், நிகழ்வுகளில் போட்டியிடும் வீரர்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளன.

ஜூன் மாதம் சுவிஸ் சாம்பியன்ஷிப்பில் இடம்பெற்ற ஊக்கமருந்து சோதனையில் ஹுசைன் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானதால் ஜூலை 16 அன்று சுவிஸ் ஒலிம்பிக் அமைப்பால் அவருக்கு ஒன்பது மாத தடை விதிக்கப்பட்டது.

சுவிஸ் தடகளத்தைப் பொறுத்தவரை, ஊக்கமருந்து தடுப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, மேலும் இது விளையாட்டு வீரர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் உயர் பொறுப்பை நிரூபிக்கிறது என்று சுவிஸ் தடகள விளையாட்டுத் தலைவர் Philipp Bandi கூறினார்.

ஹுசைன், இரத்தச் சர்க்கரைக் குறைவை சமாளிப்பதற்கான Gly-Coramin ஐ பயன்படுத்தக் கூடாது என்பது தனக்குத் தெரியாது என்று கூறிய ஹுசைன், கடுமையான விளைவு கொண்ட தவறைப் புரிந்துள்ளேன். என்னை மன்னிக்கவும். ஆனால் என்னை அறிந்த எவருக்கும் நான் தொடர்ந்து செல்வேன் என்று தெரியும் என்று ட்வீட் செய்துள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here