Search

Menu

Keeping you Informed News and Views..

சுவிஸ் மக்கள் கூடுதல் தொகையை வரிக்காக செலவிடுகின்றனர்

சுவிட்சர்லாந்து மக்கள் வருமானத்தின் கூடுதல் தொகையை வரிச் செலுத்துகைக்காக செலவிடுகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

சுவிஸ் மக்கள் கூடுதல் தொகையை வரிக்காக செலவிடுகின்றனர்

சுவிட்சர்லாந்து மக்கள் வருமானத்தின் கூடுதல் தொகையை வரிச் செலுத்துகைக்காக செலவிடுகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2019ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் குடும்பமொன்று தனது மொத்த வருமானத்தின் 31 வீதத்தை வருமான வரி, சமூகப் பாதுகாப்பு கொடுப்பனவு மற்றும் சுகாதார காப்புறுதி தவணைக் கட்டணங்களுக்காக செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2018ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த தொகை ஒரு வீத அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் சராசரி மாத மொத்த வருமானம் 9582 சுவிஸ் பிராங்குகள் என அண்மைய புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது முன்னைய ஆண்டை விடவும் 22 பிராங்குகள் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

தேறிய சராசரி வருமானம் 6600 சுவிஸ் பிராங்குகள் என சுவிட்சர்லாந்து மத்திய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மொத்த வருமானத்தில் பெரும்பகுதி பொருட்கள் சேவைகள் நுகர்விற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும், பத்து குடும்பங்களில் ஆறு குடும்பங்கள் சராசரி வருமானத்தை விடவும் குறைந்தளவு வருமானத்தை ஈட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

4500 சுவிஸ் பிராங்குகளை விடவும் குறைந்த மாத வருமானம் ஈட்டும் குடும்பங்கள் வருமானத்தை விடவும் கூடுதலாக செலவிட நேரிடுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here