சுவிட்சர்லாந்து வெள்ளத்தால் ஏற்படும் சேதங்களைத் தடுப்பதில் முன்னேற்றம் கண்டுள்ளது, ஆனால் அதிகரித்துள்ள நீர் நிலைகள் ஆபத்து நிலையிலேயே இன்னமும் இருப்பதாக ஒரு முன்னணி நீரியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.
1987, 1999, 2005 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவுகள் அபாயங்கள் குறித்ததான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன என்று பேர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Andreas Zischg கூறுகிறார்.
பாதுகாப்பு செயற்பாடுகளுக்கு கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுவிஸ் பொது வானொலியான SRF இற்குத் தெரிவித்தார்.
தீவிர வானிலை சீர்கேட்டால் மக்களும் கட்டடங்களும் ஆபத்தில் இருக்கும் பகுதிகளை சுற்றுச்சூழல் அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது. சுமார் 60,000 பேரைக் கொண்ட 8,500 குடியிருப்பு வீடுகள் உட்பட சுமார் 19,000 கட்டடங்கள் காலநிலை சீர்கேட்டால் பாதிக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மலைப்பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய மழையில் உயரும் ஆறுகளின் நீர்மட்டம் கணிக்க முடியாததாகவே உள்ளது என்றும் அவர் கூறினார்.