சுவிட்சர்லாந்து விமான நிலையங்களில் ஏற்படக்கூடிய நெருக்கடி நிலைமை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா முழுவதிலும் விமான நிலையங்களில் பெரும் நெருக்கடி நிலைமைகளை அவதானிக்க முடிகின்றது.
இவ்வறான நெருக்கடி நிலைமைகள் சுவிட்சர்லாந்திலும் ஆரம்பமாகியுள்ளது.
விமான நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கான ஆளணி வளப் பற்றாக் குறை இந்த நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சூரிச் விமான நிலையத்தில் ஏற்கனவே நீண்ட வரிசைகளை அவதானிக்க முடிவதாகவும், இந்த நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் மோசமடையும் என விமானப் பயணங்கள் குறித்த நிபுணர் அன்ட்ரெஸ் வெஹிரிலி தெரிவித்துள்ளார்.
ஜுலை ஆகஸ்ட் மாதங்களில் ஜெனீவா விமான நிலையத்திலும் கூடுதல் எண்ணிக்கையிலான பயணிகளை எதிர்பார்க்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தின் அனைத்து விமான நிலையங்களிலும் விமானப் பயண கால தாமதங்கள் மற்றும் விமானப் பயணங்கள் ரத்து செய்யப்படும் நிலைமைகளை அவதானிக்க நேரிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானப் பயணத்திற்கு மூன்று மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருகை தருமாறு சுவிஸ் விமான சேவை நிறுவனம் பயணிகளிடம் கோரியுள்ளது.