சுவிட்சர்லாந்தில் வீதி விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
கடந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலங்களுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டின் அரையாண்டு பகுதியில் வீதி விபத்துகளினால் பதிவான உயிரிழப்புக்கள் வீழ்ச்சி அடைந்துள்ளன.
இந்த ஆண்டின் முதல் அரையாண்டு பகுதியில் 100 பேர் கொல்லப்பட்டதுடன் 1818 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டில் வீதி விபத்துக்களினால் பதிவான மரணங்களும் பாரதூரமான காயமடைதல் சம்பவங்களும் அதிகரித்திருந்தன.
எனினும் இந்த ஆண்டில் குறித்த எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளது.
பதிவான மரணங்களில் அதிக அளவு மரணங்கள் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துக்களினால் பதிவாகியுள்ளது