டெக்ஸாஸின் பாலர் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 19 சிறுவர்கள் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு வயது வந்தவர்கள் உயிரிழந்துள்ளனர்.
18 வயதான இளைஞன் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கைத்துப்பாக்கி மற்றும் செமி அட்டோமேடிக் துப்பாக்கி என்பனவற்றை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞன் வீட்டில் தனது பாட்டியை சுட்டுக் கொன்று விட்டு, பாடசாலையில் இந்த விபரீதத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சால்வடோர் ராமோஸ் என்ற 18 வயது இளைஞரே இந்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, துப்பாக்கி பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ஜோ பய்டன் தெரிவித்துள்ளார்.