Search

Menu

Keeping you Informed News and Views..

துருக்கியில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் ட்ரோன்கள்

துருக்கியில் சரக்குகளை அல்லது பண்டங்களை ஏற்றிச் செல்லக்கூடிய ட்ரோன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

துருக்கியில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் ட்ரோன்கள்

துருக்கியில் சரக்குகளை அல்லது பண்டங்களை ஏற்றிச் செல்லக்கூடிய ட்ரோன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையில் இவ்வாறு பண்டங்களை போக்குவரத்து செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தற்பொழுது ட்ரோன்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களை விநியோகம் செய்யவும், அத்தியாவசிய மருந்துப் பொருட்களை விநியோகம் செய்யவும் சில நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

பண்டங்களை காவிச் செல்லக்கூடிய ட்ரோன்களை துருக்கி பரிசோதனை செய்துள்ளது.

நாட்டின் முக்கிய நகரங்களான இஸ்தான்புல், அங்காரா, எஸிகிசர் போன்ற நகரங்களுக்கு இடையில் இந்த பண்டங்களை காவிச் செல்லும் ட்ரோன் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

விமானங்கள், மக்கள் மற்றும் பறவைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த ட்ரோன் சேவை அமைய வேண்டும் என்பதில் கூடுதல் கரிசனை எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

நான்கு கிலோ கிராம் எடை வரையில் ட்ரோன்கள் மூலம் பொருட்கள் போக்குவரத்து செய்யப்பட உள்ளது.

நாட்டில் தற்பொழுது சுமார் 50,000 பதிவு செய்யப்பட்ட ட்ரோன்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும், ட்ரோன்கள் மூலம் பொருட்களை காவிச் செல்லும் சரக்கு போக்குவரத்து சேவை எப்போது ஆரம்பமாகும் என்பது பற்றிய தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

துருக்கியில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் ட்ரோன்கள்

துருக்கியில் சரக்குகளை அல்லது பண்டங்களை ஏற்றிச் செல்லக்கூடிய ட்ரோன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

துருக்கியில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் ட்ரோன்கள்

Search here