Search

Menu

Keeping you Informed News and Views..

தென் ஆபிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கு பயணத் தடை விதிப்பு

தென் ஆபிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கு இலங்கை தற்காலிக அடிப்படையில் பயணத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.

தென் ஆபிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கு பயணத் தடை விதிப்பு

தென் ஆபிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கு இலங்கை தற்காலிக அடிப்படையில் பயணத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.

அதிவீரியம் கொண்ட புதிய வகையான வைரஸ் பரவலையடுத்து, இவ்வாறு தற்காலிக பயணத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோத்தோ மற்றும் எசுவாத்தினி ஆகிய நாடுகளில் இருந்தே இலங்கை வர இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் நள்ளிரவு முதல் மறுஅறிவித்தல் வரையில் இத்தடை அமுலில் இருக்கும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

பயணத் தடை அறிவிக்கப்பட்டுள்ள குறித்த நாடுகளிலிருந்து இன்று எவரேனும் வருகைத் தந்திருக்கும் பட்சத்தில், அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்காவில் பரவும் அதிவுயர் ஆபத்தான கொவிட் ஒமிக்ரோன் திரிபு பரவுகையிலிருந்து இலங்கையை பாதுகாக்கும் நோக்கிலேயே, இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here