லித்துவேனியாவைச் சேர்ந்த நபர் ஒருவரின் வயிற்றில் பெருமளவு இரும்புப் பொருட்கள் காணப்பட்டுள்ளன.
சுமார் ஒரு கிலோ கிராமிற்கு மேற்பட்ட இரும்பு பொருட்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
இரும்பு ஆணிகள், கத்திகள், ஸ்க்ரூ ஆணிகள் உள்ளிட்ட பல்வேறு இரும்பு பொருட்கள் இவரது வயிற்றில் காணப்பட்டுள்ளது.
சில வகை இரும்பு பொருட்கள் நான்கு அங்குலம் அதாவது பத்து சென்றிமீற்றர் வரையில் நீளமானவை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Klaipeda University வைத்தியசாலையில் குறித்த நபருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் ஓர் மருத்துவ வரலாற்றில் விசித்திரமான ஓர் சம்பவம் என சத்திரசிகிச்சை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடுமையான வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரை பரிசோதனை செய்த போது அவருடைய வயிற்றில் பெருமளவு இரும்பு பொருட்கள் காணப்படுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த நபர் தற்பொழுது ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், குறித்த நபர் ஏன் இவ்வளவு இரும்பு பொருட்களை விழுங்கினார் என்பது பற்றிய விபரங்களை வைத்தியசாலை இதுவரையில் வெளியிடவில்லை.