Search

Menu

Keeping you Informed News and Views..

பாலியல் குற்றச்சாட்டின் காரணமாக இராணுவ உயர் பதவியை இழந்த இளவரசர்

பிரித்தானிய இளவரசர் அன்ட்றூ, பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் காரணமாக அதி உயர் இராணுவ பதவியை இழந்துள்ளார்.

பிரித்தானிய மஹாராணியின் இரண்டாம் புதல்வரான இளவரசர் அன்ட்றூ சகல கௌரவ பட்டங்களையும் இழக்க நேரிட்டுள்ளது.

பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்டதாக இளவரசர் அன்ட்றூ மீது அமெரிக்காவில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் இராணுவத்தில் வழங்கப்பட்டிருந்த அதி உயர் பதவி மற்றும் அரச குடும்ப மரியாதை என்பனவற்றை களைவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிகழ்வுகளில் இளவரசர் அன்ட்றூ அரச குடும்பத்தை பிரதிநிதித்துவம் செய்ய மாட்டார் எனவும், தனக்கு எதிரான வழக்கினை சாதாரண பிரஜையாக எதிர்நோக்குவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இளவரசர் அன்ட்றூ மீது Virginia Giuffre  என்ற பெண் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here