Search

Menu

Keeping you Informed News and Views..

பிரித்தானியாவில் குரங்கு அம்மை நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

பிரித்தானியாவில் குரங்கு அம்மை நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பிரித்தானியாவில் குரங்கு அம்மை நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

பிரித்தானியாவில் குரங்கு அம்மை நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுவரையில் பிரித்தானியாவில் 57 குரங்கு அம்மை நோயாளிகள் பதிவாகியுள்ளனர் என அந்நாட்டு சுகாதார பாதுகாப்பு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குரங்கு அம்மை நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலைமை குறித்து கரிசனை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், பிரித்தானிய மக்களுக்கு பாரியளவு அச்சுறுத்தல்கள் கிடையாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய நிலைமைகள் பாரதூரமானவை அல்ல எனவும் இந்த நிலைமைகள் குறித்து கண்காணிக்கப்பட வேண்டியது அவசியமானது என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

டென்மார்க் மற்றும் ஸ்கொட்லாந்திலும் குரங்கு அம்மை நோயாளிகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பிரித்தானியாவில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு எவ்வித உத்தேசமும் கிடையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

பிரித்தானியாவில் குரங்கு அம்மை நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

பிரித்தானியாவில் குரங்கு அம்மை நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பிரித்தானியாவில் குரங்கு அம்மை நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

Search here