Search

Menu

Keeping you Informed News and Views..

பூச்சிக் கொல்லிகளினால் ஏற்படும் தற்கொலைகள்: Syngenta (Swiss Made) மீது ஆய்வாளர்கள் கண்டனம்

Paraquat மீதான தடையையடுத்து தென்கொரியாவில் நஞ்சருந்துவதன் மூலம் ஏற்படும் தற்கொலைகள் 45 சத வீதத்தால் குறைந்துள்ளன. அதே நேரம் இலங்கையில் Paraquat விற்பனை தடை செய்யப்பட்டதையடுத்து தற்கொலைகள் கணிசமான அளவில் குறைந்துள்ளன.

பூச்சிக் கொல்லிகளினால் ஏற்படும் தற்கொலைகள்: Syngenta (Swiss Made) மீது ஆய்வாளர்கள் கண்டனம்

வாழ்க்கையில் நம்பிக்கை இழந்தவர்கள் சின்ஜென்டாவின் (Syngenta) Paraquat பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இந்நிலையில் மேற்படி பூச்சிக்;கொல்லியில் வாந்தியை ஏற்படுத்தக்கூடிய இரசாயனங்கள்; அதிக அளவில் சேர்க்கப்படவேண்டும் என்று சின்ஜென்டாவின் முன்னாள் ஊழியர் ஒருவர் வற்புறுத்திக் கேட்டுள்ளார். ஆனால் Syngenta இதை வேறு விதமாகப் பார்க்கிறது.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் விரக்தியுற்ற நிலையில் உள்ள விவசாயிகள் Paraquat களைநாசினியான பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த பூச்சிக் கொல்லி அதிக நஞ்சுடன் கூடியது. சுவிஸ் நிறுவனமான Syngenta இதனை தயாரிக்கிறது.

இந்நிலையில் paraquatவில் வாந்தியை ஏற்படுத்தும் இரசாயனங்கள் அதிக அளவில் சேர்க்கப்படவேண்டும் என்று அந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான வேதியியலாளர் Jon Heylings நீண்ட காலமாக வற்புறுத்தி வருகிறார்.

“இந்த உலகில் எங்காவது ஒருவர் Gramoxone உட்கொண்டு விட்டார் என்று நினைக்கும்போது எனக்கு தூங்கக்கூட முடியவில்லை” என்று Jon Heylings கடந்த புதன் கிழமை மாலை ‘Rundschau’ என்ற சுவிஸ் வானொலியில் பேசியபோது கூறினார். Paraquat என்ற பூச்சிக்கொல்லியை Gramoxone என்ற குறியீட்டு பெயரிலேயே Syngenta  விற்பனை செய்கிறது.

சுவிட்சர்லாந்தில் Paraquatவுக்கு தடை

சுவிட்சர்லாந்திலும் ஐரோப்பிய யூனியனிலும் Paraquat தடை செய்யப்பட்டுள்ளது. இந்த களைநாசினியான இந்த பூச்சிக்கொல்லி உலகிலேயே மிகவும் மோசமான மரணங்களை ஏற்படுத்தும் பூச்சிக்;கொல்லிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

இதன் விஷத்தை முறியடிக்கக்கூடிய மாற்று மருந்து எதுவும் இல்லை. எனினும் Paraquat அமெரிக்கா, நியூசிலாந்து, ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

50 வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது முதல் Paraquat விஷத்தினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதற்கு மேலாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் விரக்தியுற்ற நிலையில உள்ள விவசாயிகள் Paraquatஅருந்தியே தற்கொலை செய்து கொள்கின்றனர்.

நாம் உங்களுக்கு உதவுகிறோம்.

உங்களது தனிப்பட்ட நெருக்கடியை உங்களால் தீர்த்துக்கொள்ள முடியவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அதற்கு பரவாயில்லை. நான் உங்களுக்கு உதவுகிறேன்.

சுவிட்சர்லாந்தில் தற்கொலை எண்ணத்தடன் உள்ளவர்களுக்கு எந்த நேரத்திலும் இலவசமாக நம்பிக்கையுடன் உதவ பல அலுவலகங்கள் உள்ளன. அந்த அலுவலகங்கள் கீழே தரப்படுகின்றன.

Die Dargebotene Hand: Tel 143, www.143.ch
Advice + Help 147 for young people: Tel 147, www.147.ch
Talking can save: www.reden-kann-retten.ch

Paraquat அருந்திவர்களின் உயிரை சிறியவொரு செயற்பாட்டின் மூலம் காப்பாற்றமுடியும் என்று Heylings நம்புகிறார். “அந்த களைக்கொல்லியை அருந்தியவர் அந்த விஷத்தை உடனடியாக வாந்தியெடுக்கச் செய்யும் வகையிலான இரசாயனங்களை மேற்படி களைக்கொல்லியில் அதிக அளவில் சேர்க்கவேண்டும்” என்று அவர் கூறுகிறார். இளம் வயதில் அவர் ஒரு ஆராய்ச்சியாளராக இருந்த போதே 10 மடங்குக்கு மேற்பட்ட வாந்தியெடுக்க வைக்கச் செய்யும் இரசாயன வகைகள் அதில் சேர்க்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தியபோதும், அது அவ்வாறு நடக்க வில்லை.

Syngenta மறுக்கிறது

கண்டனத்துக்கு ஆளான இரசாயன நிறுவனமான Syngenta வின் கருத்து வேறு விதமாக உள்ளது.

Jon Heyling மற்றும் அவரது வாதத்தைப்பற்றி தீவிரமாக ஆராய்ந்த மேற்படி நிறுவனம் “வாந்தியை அதிகரிக்கும் இரசாயனங்களை பயன்படுத்தினாலும் அது தீர்வாக அமையும் என்பதை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றுகள் இல்லை” என்று சுவிஸ் வானொலிக்கு எழுதிய செய்தியில் கூறியுள்ளது.

இதற்கு மேலதிகமாக, Heyling இன் வாதம் மிகவும் சாதாரணமாக உள்ளது. அவர் வேறு பல விடயங்களை புறக்கணிக்கிறார் என்று அந்த நிறுவனம் கூறுகிறது. இதற்கிடையே விவசாயிகளை பயிற்றுவிப்பதில் மேற்படி நிறுவனம் மிகுந்த கவனம் செலுத்துகிறது. அத்துடன் பாதுகாப்பை அதிகப்படுத்த புதிய பொதி செய்யும் முறையொன்றை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுத்திருக்கிறது.

தடையானது தற்கொலை வீதத்தை குறைத்துள்ளது.

Heyling முன்மொழிந்துள்ள தீர்வு யோசனை ஒரு புறம் இருக்க, வேறு பல ஆய்வுகளும் இதுவரை Paraquat இன் ஆபத்துகள் பற்றி பரிசீலித்துள்ளன. உலக சுகாதார அமைப்பு 2019 இல் நடத்திய ஆய்வில் பூச்சிக்;கொல்லிகள் மீதான தடைகள் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள்; தற்கொலை வீதத்தை குறிப்பிடத் தக்க அளவு குறைக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளது.

Paraquat மீதான தடையையடுத்து தென்கொரியாவில் நஞ்சருந்துவதன் மூலம் ஏற்படும் தற்கொலைகள் 45 சத வீதத்தால் குறைந்துள்ளன. அதே நேரம் இலங்கையில் Paraquat விற்பனை தடை செய்யப்பட்டதையடுத்து தற்கொலைகள் கணிசமான அளவில் குறைந்துள்ளன.

Revealed: Why UK kept exporting a deadly pesticide that kills thousands

Tens of thousands of people, like teenager Shashikala from Sri Lanka, died from poisoning by a lethal pesticide made in the UK. Hundreds of secret documents and a whistleblower raise questions about whether manufacturer Syngenta put profit before people.

The weedkiller Gramoxone, with its active ingredient paraquat, has helped farmers grow food cheaply for decades. But it’s so lethal, one sip can kill. One former UN official told us deaths may be in the hundreds of thousands.

Gramoxone is so toxic its sale has been banned in the UK and EU for more than 10 years. But it’s still made by Syngenta in Huddersfield before being sent all over the world to countries including to India, where farmers still use it today.

Channel 4 News and Unearthed reveal that Syngenta presented flawed safety data on Gramoxone. And secret company documents suggest Syngenta had safer more expensive alternatives that it held back from consumers to protect its profits – which the company deny.

Channel 4 News spoke to a whistleblower, a senior scientist at the company for more than 20 years, about how as early as 1990 he raised safety concerns at the company. Little has changed.

Syngenta denies these allegations. It told Channel 4 News it is “heartbreaking that people have been harmed” by its product and that there is “fundamental disagreement” on the science concerned. It also told us that it’s “invested hundreds of millions of dollars” trying to make Gramoxone safer. Syngenta deny it ever put profits before safety.

“It’s the same that’s happened over the last 40 years. And they’re still dying.”

And a warning this exclusive report from our Chief Correspondent Alex Thomson deals with issues of suicide which some may find distressing.

Tens of thousands of people, like teenager Shashikala from Sri Lanka, died from poisoning by a lethal pesticide made in the UK. Hundreds of secret documents and a whistleblower raise questions about whether manufacturer Syngenta put profit before people.
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

பூச்சிக் கொல்லிகளினால் ஏற்படும் தற்கொலைகள்: Syngenta (Swiss Made) மீது ஆய்வாளர்கள் கண்டனம்

Paraquat மீதான தடையையடுத்து தென்கொரியாவில் நஞ்சருந்துவதன் மூலம் ஏற்படும் தற்கொலைகள் 45 சத வீதத்தால் குறைந்துள்ளன. அதே நேரம் இலங்கையில் Paraquat விற்பனை தடை செய்யப்பட்டதையடுத்து தற்கொலைகள் கணிசமான அளவில் குறைந்துள்ளன.

பூச்சிக் கொல்லிகளினால் ஏற்படும் தற்கொலைகள்: Syngenta (Swiss Made) மீது ஆய்வாளர்கள் கண்டனம்

Search here