Search

Menu

Keeping you Informed News and Views..

பொது போக்குவரத்து மற்றும் கடைகளில் கொவிட் சான்றிதழைக் கோரும் சுவிஸ் கன்டோன்

கொவிட் சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த முடியும் அல்லது சில்லறை கடைகளுக்குச் செல்ல முடியும்.

பொது போக்குவரத்து மற்றும் கடைகளில் கொவிட் சான்றிதழைக் கோரும் சுவிஸ் கன்டோன்

சுவிட்சர்லாந்தின் விரிவாக்கப்பட்ட கொவிட் சான்றிதழ் விதிகள் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்நிலையில் ஒரு சுவிஸ் கன்டோன் சான்றிதழ் தேவையை மேலும் விரிவாக்கியுள்ளது.

பார்கள், உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளில் கொவிட் சான்றிதழ்கள் தேவை என்ற சுவிஸ் அரசின் திட்டம், ஆகஸ்ட் மாத இறுதியில் முன்மொழியப்பட்டு, கன்டோன்களிடையே பரந்த ஒப்புதலைப் பெற்றது.

தற்போது, ​​கொவிட் சான்றிதழ் – தடுப்பூசி விபரம், கொவிட் தொற்று சோதனை விபரம் என்பவற்றை வழங்குகிறது. சுவிட்சர்லாந்தில் 1,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மேற்பட்டோர் கலந்துகொள்ளும் இரவு விடுதிகள், டிஸ்கோக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு இந்த சான்றிதழ் தேவைப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் பயணங்களுக்கும் கொவிட் சான்றிதழ்கள் தேவை.

நாளை செப்டம்பர் 13 திங்கள் முதல் பார்கள், உணவகங்கள், ஜிம்கள் மற்றும் சில தனியார் நிகழ்வுகளில் சான்றிதழ் தேவைப்படும் என்று அரசாங்கம் கடந்த புதன்கிழமை அறிவித்தது.

தற்போது பொது போக்குவரத்து மற்றும் சில்லறை கடைகளுக்கும் கட்டாய கொவிட் சான்றிதழ் தேவையை அறிமுகப்படுத்துவதை ஆதரிப்பதாக Graubünden அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Graubünden இன் திட்டத்தின் கீழ், தடுப்பூசி போடப்பட்டவர்கள், எதிர்மறை சோதனை செய்தவர்கள் அல்லது சமீபத்தில் தொற்றிலிருந்து மீண்டவர்கள் மற்றும் அதன் மூலம் சரியான கொவிட் சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த முடியும் அல்லது சில்லறை கடைகளுக்குச் செல்ல முடியும்.

இந்த திட்டம் சுவிட்சர்லாந்தில் முதல் முறையாக இருந்தாலும், ஜெர்மனியில் இதே போன்ற திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

இவ்வாறான கடுமையான விதிகள் ‘சரியான திசையில் ஒரு படி மேலானது மற்றும் தேவையானது’ என நீதித்துறை தலைவர் Peter Peyer வரவேற்றுள்ளார். ஆனால் தடுப்பூசிகளை ஊக்குவிக்க மேலும் நடவடிக்கை தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

வரவிருக்கும் குளிர்காலத்தை கருத்திற்கொண்டு – மருத்துவமனைகள் நிரம்பி வழிய விடாமல் கவனம் செலுத்துவதாக அரசாங்கம் கூறியுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

பொது போக்குவரத்து மற்றும் கடைகளில் கொவிட் சான்றிதழைக் கோரும் சுவிஸ் கன்டோன்

கொவிட் சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த முடியும் அல்லது சில்லறை கடைகளுக்குச் செல்ல முடியும்.

பொது போக்குவரத்து மற்றும் கடைகளில் கொவிட் சான்றிதழைக் கோரும் சுவிஸ் கன்டோன்

Search here