Search

Menu

Keeping you Informed News and Views..

மட்டுப்படுத்தப்படும் வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் சேவைகள்

வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டுப்படுத்தப்படும் வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் சேவைகள்

வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் சேவை வழங்கும் பிரிவின் டிஜிட்டல் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு சேவைகள் வரையறுக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி இன்று முதுல் கொன்சியூலர் பிரிவின் சேவைகளை பெற்றுக;காள்ளக்கூடிய உச்ச வரம்பு எண்ணிக்கை 150 ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் டிஜிட்டல் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, வெளிநாடு செல்லும் நபர்களின் சான்றிதழ்களை உறுதி செய்யும் நடவடிக்கை பாதிக்கப்பட்டது.

வழமையாக சுமார் ஆயிரம் பேருக்கு  கல்விச் சான்றிதழ்கள், திருமண சான்றிதழ்கள், பிறப்பு அத்தாட்சிப் பத்திங்கள் உள்ளிட்ட ஆவணங்களை உறுதி செய்து கொடுக்கும் பணிகள் கொன்சியூலர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக மக்கள் எதிர்நோக்கி வரும் அசௌகரியங்களுக்காக வருந்துவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலதிக விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டுமாயின் 011 233881 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவோ அல்லது dgcons@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளவே முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here