சுவிட்சர்லாந்தின் சூரிச் கான்டனில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
பரீட்சார்த்த அடிப்படையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.
சுவிட்சர்லாந்து பசுமைக் கட்சியினால் இந்த மாதவிடாய் விடுமுறை குறித்த யோசனை முன்மொழியப்பட்டது இது குறித்து பல ஆண்டுகள் விவாதிக்கப்பட்டு வந்தது.
மாதவிடாய் காலத்தில் கடுமையான வலியை எதிர்நோக்கும் பெண்களுக்கு ஐந்து நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை வழங்கும் திட்டத்தை சூரிச் மாநகரசபை நிர்வாகம் பரீட்சார்த்த அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது.
சுவிட்ர்லாந்தில் முதல் தடவையாக இவ்வாறான ஓர் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.