முதலாம் உலக யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டு ஒன்று சூரிச் குளத்தில் மீட்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் காலை வேளையில் குளத்தின் அடிப் பகுதியிலிருந்து குண்டு மீட்கப்பட்டுள்ளது.
சூரிச் மாநகரசபை பொலிஸ் மற்றும் இராணுவ சுழியோடிகள் இந்த குண்டை கண்டு பிடித்துள்ளனர்.
பொழுது போக்கிற்காக சுழியோடும் நபர் ஒருவர் முதலில் இந்த குண்டை கண்டுள்ளதாகவும் அவர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு காரணங்களுக்காக குறித்த பகுதியை முடக்கி குண்டு மீட்கப்பட்டுள்ளது.
இந்த குண்டு ஜெர்மனியில் உற்பத்தி செய்யப்பட்டது எனவும் 1914 முதல் 1918ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இந்த குண்டு உற்பத்தி செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.