Search

Menu

Keeping you Informed News and Views..

மொங்கோலியாவுக்கு கொவிட் மருத்துவ உதவியை அனுப்பும் சுவிட்சர்லாந்து

பெண்கள் குழந்தைகளை பராமரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும்.

மொங்கோலியாவுக்கு கொவிட் மருத்துவ உதவியை அனுப்பும் சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து மனிதாபிமான உதவியாக 40 சுவாசக் கருவிகளையும் 45 ஒட்சிசன் செறிவூட்டல்களையும் மொங்கோலிய தலைநகரான உலான்பாதருக்கு அனுப்பியுள்ளது, இதன் மொத்த மதிப்பு சுமார் CHF850,000 ($930,000).

மொங்கோலியாவின் பொது சுகாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, மொங்கோலிய அதிகாரிகள் உதவி கோரியதற்கு பதிலளிக்கும் விதமாக, கொவிட் -19 தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் அந்நாட்டுக்கு மனிதாபிமான உதவி வழங்க சுவிட்சர்லாந்து முடிவு செய்துள்ளது” என்று வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பெடரல் விமான போக்குவரத்து சேவையின் விமானமொன்று நேற்று திங்களன்று சூரிச்சிற்கு வெளியே Dübendorf இராணுவ விமான தளத்திலிருந்து உலான்பாதருக்கு புறப்பட்டது. சுவிஸ் ஆயுதப்படை மருந்தகம் வழங்கிய 40 சுவாசக் கருவிகளுக்கு மேலதிகமாக, 45 ஒட்சிசன் செறிவூட்டல்களும் இந்த விமானத்தில் அனுப்பப்பட்டன.

இந்த உபகரணங்கள் மொங்கோலிய அதிகாரிகளால் உலான்பாதரில் பெறப்பட்டு பல்வேறு தளங்களுக்கு கொண்டு செல்லப்படும், குறிப்பாக பெண்கள் குழந்தைகளை பராமரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும்.

மொங்கோலியாவில் மனிதாபிமான கொள்கைகளுக்கு இணங்க, தேவையின் அடிப்படையில் பொருட்கள் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here