Search

Menu

Keeping you Informed News and Views..

யேமனுக்கு தொடர்ந்தும் மனிதாபிமான உதவிகளை வழங்கும் சுவிஸ் அரசாங்கம்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் நிரந்தரமற்ற உறுப்புரிமையை பெற்றுக் கொள்வதற்கான முனைப்புகளை மேற்கொள்ளவும் இந்த சந்தர்ப்பத்தை ஜனாதிபதியும் வெளிவிவகார பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

யேமனுக்கு தொடர்ந்தும் மனிதாபிமான உதவிகளை வழங்கும் சுவிஸ் அரசாங்கம்

யேமனுக்கு தொடர்ந்தும் மனிதாபிமான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுவிட்சர்லாந்து அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளது.

யேமனுக்கு ஒரு மில்லியன் சுவிஸ் பிராங்குகள் பெறுமதியான உதவிகளை வழங்க உள்ளதாக சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சர் Ignazio cassis  தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

யுத்தம் காரணமாக யேமனில் 20 மில்லியன் மக்களுக்கு உதவிகள் தேவைப்படுவதாகவும், 3.6 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே யேமனுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் 14 மில்லியன் சுவிஸ் பிராங்குகளை உதவியாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீர், உணவுப் பாதுகாப்பு, சிவிலியன் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை மனிதபிமான தேவைகளுக்காக ஒரு மில்லியன் பிராங் நிதி உதவியை வழங்க உள்ளது.

சுவிட்சர்லாந்து ஜனாதிபதி Guy Parmelin  மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் 76ம் அமர்வுகளில் பங்கேற்றுள்ளனர்.

ஜனாதிபதியும், வெளிவிவகார அமைச்சரும் பல்வேறு நாடுகளுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் நிரந்தரமற்ற உறுப்புரிமையை பெற்றுக் கொள்வதற்கான முனைப்புகளை மேற்கொள்ளவும் இந்த சந்தர்ப்பத்தை ஜனாதிபதியும் வெளிவிவகார பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

எதிர்வரும் ஆண்டு ஜூன் மாதம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவைக்கான நிரந்தரமற்ற உறுப்புரிமை நாடுகளுக்கான வாக்கெடுப்பு நடாத்தப்பட உள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here