நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை உக்கிரமடைந்துள்ள பின்னணீியில் அரச வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் மக்களிடம் கூடுதல் தொகை வரியை அறவீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பணியாளர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டிய வரி தொகை கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, மாத வருமானம் 1,000,000 ரூபாவாக இருந்தால், புது வருடத்திலிருந்து 286,500 ரூபா அறவிடப்படும்.
இது 2018-2019 ஆண்டுடன் ஒப்பிடும் போது விதிக்கப்பட்ட 186,000 ரூபா வரித் தொகையில் 90,000 ரூபா அதிகரிப்பாகும்.
உங்களின் சம்பளம் 750,000 ரூபா என்றால், உங்கள் வரித் தொகை கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் 45,000 ரூபாவால் அதிகரித்து 196,500 ரூபா வீதத்தை எட்டியுள்ளது.
இதுதவிர உங்கள் சம்பளம் ஒரு இலட்சமாக இருந்தால் வரி ஏதும் வசூலிக்கப்படுவதில்லை என்பதும் சட்டிக்காட்டத்தக்கது.