Search

Menu

Keeping you Informed News and Views..

வருடாந்த விடுமுறையை ஐந்து வாரங்களாக நீடிக்குமாறு கோரிக்கை

சுவிட்சர்லாந்தில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் வருடாந்த விடுமுறையை ஐந்து வாரங்களாக நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வருடாந்த விடுமுறையை ஐந்து வாரங்களாக நீடிக்குமாறு கோரிக்கை

சுவிட்சர்லாந்தில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் வருடாந்த விடுமுறையை ஐந்து வாரங்களாக நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பாப்டிஸ்டி ஹுர்னி இது குறித்த பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

பணியாளர்களுக்கு ஐந்து வாரங்கள் சம்பளத்துடனான வருடாந்த விடுமுறையை தொழில் தருனர்கள் வழங்க வேண்டுமென கோரியுள்ளார்.

தற்பொழுது 20 வயதுக்கும் குறைந்தவர்களுக்கு மட்டுமே ஐந்து வாரங்கள் வருடாந்த விடுமுறை வழங்கப்படுகின்றது.

ஏனைய அனைத்து பணியாளர்களுக்கும் வருடாந்த விடுமுறை நான்கு வாரங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது.

இதேவிதமாக விடுமுறைக் காலத்தை நீடிக்கும் பிரேரணை ஒன்று (ஆறு வாரங்கள் வருடாந்த விடுமுறை)கடந்த 2012ம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் அந்த யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நீண்ட விடுமுறை வழங்கப்பட்டால் அது சுவிஸ் பொருளாதாரத்திற்கு பல பில்லியன் பிராங்குகள் நட்டத்தை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் பிரேரணை நிராகரிக்கப்பட்டது.

பணியாளர்கள் ஆறு வார கால விடுமுறையை எதிர்பார்க்கவில்லை எனவும் ஐந்து வாரங்கள் வருடாந்த விடுமுறை வழங்கப்பட வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுர்னி தெரிவித்துள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here