Search

Menu

Keeping you Informed News and Views..

வானிலை சீரானபோதும் சுவிஸ் ஏரிகள், ஆறுகள் ஆபத்து நிலையில்

மக்கள் கவனத்துடன் இருக்கவும் அதிக ஆபத்துள்ள கரையோரங்களைத் தவிர்க்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வானிலை சீரானபோதும் சுவிஸ் ஏரிகள், ஆறுகள் ஆபத்து நிலையில்

வானிலை சீரடைந்த காரணத்தால், பெரும்பாலான சுவிஸ் ஏரிகள் ஆறுகளின் நீர் கொள்ளளவு மேலும் அதிகரிக்காமல் சனிக்கிழமையன்று உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் மக்கள் கவனத்துடன் இருக்கவும் அதிக ஆபத்துள்ள கரையோரங்களைத் தவிர்க்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

SRF Meteo வின் கூற்றுப்படி, இன்று ஞாயிற்றுக்கிழமை முதல், கோடை வெப்பநிலையுடன் வானிலை பெரும்பாலும் வறண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு “நூற்றாண்டின் வெள்ளம்” பற்றிய அச்சங்கள் பெரும்பாலும் அகன்றுவிட்டாலும், பல பிராந்தியங்களில் அதிகளவு நீர் இருப்பதைக் கருத்தில் கொண்டு வெள்ளம் அல்லது நிலச்சரிவுகள் இன்னும் ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

Neuchatel ஏரி சனிக்கிழமையன்று அதன் மிக உயர்ந்த நீர் மட்டத்தை (430.57 மீட்டர்) எட்டியது. Vaud கன்டோனில் குறைந்தது 600 கட்டடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. ஏரியின் கரையைச் சுற்றியுள்ள மின்தொடர்புகள் பாதுகாப்பு காரணங்களுக்காக துண்டிக்கப்பட்டிருந்தது.

ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தைப் போலல்லாமல் சுவிட்சர்லாந்தில் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.

வெள்ளி, சனிக்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையின் காரணமாக, லூசர்ன் ஏரி, துன் ஏரி, பீல் ஏரி ஆகியவை அதிக ஆபத்து நிலை 5 இல் உள்ளன. ஜெனீவா ஏரி, சூரிச் ஏரி, நியூச்சடெல் ஏரி ஆகியவை வெள்ள அபாய அளவை 4 ஐ எட்டின.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here