சுவிட்சர்லாந்தில் விமான டிக்கட்டுகளின் விலைகள் தொடர்ச்சியாக உயர்வடைந்துள்ளது.
விமானப் பயணங்கள் ரத்து செய்யப்படுதல் மற்றும் விமான நிலையங்களில் கால தாமதங்கள் ஆகிய பிரச்சினைகளுக்கு மத்தியில் விமான டிக்கட்டுகளின் விலைகள் உயர்வடைந்துள்ளன.
கோடைகால விடுமுறை காலப் பகுதி போன்ற அதிகளவு கேள்வி காணப்படும் காலங்களில் விமான டிக்கட்டுகளுக்கான விலைகள் அதிகரிப்பது வழமையானதேயாகும்.
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக விமான டிக்கட்டுகளின் விலைகள் தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களை விடவும் இந்த ஆண்டில் விமான டிக்கட்டுகளின் விலைகள் உயர்வடையும் என எதிர்பார்க்க்ப்படுகின்றது.