வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு கூடுதல் அரசியல் உரிமைகளை வழங்கும் யோசனைகளை சுவிட்சர்லாந்து நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது.
வெளிநாட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்து தேர்தல்களின் போது கூடுதல் உரிமைகளை வழங்கும் வகையில் முன்வைக்கப்பட்ட இரண்டு யோசனைகள் நாடாளுமன்றில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் ஐந்து ஆண்டு சட்ட ரீதியாக நிரந்தரமாக வதிவோருக்கு தேர்தலில் வாக்களிப்பதற்கும் போட்டியிடுவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென பசுமை கட்சி கோரியிருந்தது.
வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு மாநகரசபை தேர்தல்களில் பூரண அரசியல் உரிமை வழங்கப்பட வேண்டுமென சமூக ஜனநாயகக் கட்சி கோரியிருந்தது.
எவ்வாறெனினும் இந்த இரண்டு யோசனைகளையும் சுவிட்சர்லாந்தின் நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது.