Search

Menu

Keeping you Informed News and Views..

வைரஸ் பிறழ்வுகளை தவிர்க்க முடியாது

வைரஸ்களில் ஏற்படக் கூடிய பிறழ்வுகளை நிரந்தரமாகவே தவிர்த்து விட முடியாது என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு சக்தி பீடத்தின் பணிப்பாளர் கலாநிதி டொக்டர் சந்திம ஜவேந்திர தெரிவித்துள்ளார்.

தென் ஆபிரிக்காவில் புதிதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ள கோவிட் பிறழ்வான ஒமிக்ரோன் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த வைரஸ் பிறழ்வின் தாக்கத்தை எதிர்கொள்ள ஆயத்த நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வைரஸ் பிறழ்வினை கண்டு அறிந்து கொள்வதற்கான ஆய்வுகூட வசதிகள் காணப்படுவதாகவும் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்குள் பிரவேசிப்போர் தொடர்பான தற்போதைய கோவிட் கட்டுப்பாடுகள் போதுமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பூஸ்டர் தடுப்பூசி மூலம் நோய் எதிர்ப்பு சக்தி மேலும் அதிகரிக்கும் என்பதனால் இந்த புதிய ஒமிக்ரோன் திரிபு குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கு மக்கள் முனைப்பு காட்ட வேண்டியது அவசியமானது என கலாநிதி ஜீவேந்திர தெரிவித்துள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here