ரீயூனியன்தீவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த 38 சட்டவிரோத குடியேற்றவாசிகள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
கடல்வழியாக ரீயூனியன் தீவிற்கு செல்ல முயன்ற 38 இலங்கையர்கள் 14 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.
டிசம்பர் முதலாம் திகதி நீர்கொழும்பு துறைமுகத்திலிருந்து மீன்பிடி படகொன்று ஐந்து பேருடன் புறப்பட்டதாகவும் இதன் பின்னர் 13 -14 ஆம் திகதிகளில் புத்தளத்திலிருந்து 64 குடியேற்றவாசிகள் படகில் ஏற்றப்பட்டனர் எனவும தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை தொடர்ந்து குறிப்பிட்ட படகு டியோகார்சியாவை நோக்கி புறப்பட்டுள்ளது, அங்கு இவர்களை 30 ஆம் திகதி பிரிட்டனின் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
எனினும் ஆள்கடத்தல்காரர்கள் சட்டவிரோத குடியேற்றவாசிகள் குழுவொன்றுடன் ரீயூனியன் தீவிற்கு சென்றுள்ளனர், அங்கு இவர்களை அதிகாரிகள் 14 ம் திகதி கைதுசெய்துள்ளனர்.
இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பின்னர் அதிகாரிகள் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர்.
இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்கள் சி.ஐ.டியினரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கல்பிட்டி கண்டியை சேர்ந்த ஆள்கடத்தல்காரர்கள் தலா 400,000 முதல் 1000 000 வரை பெற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.