Search

Menu

Keeping you Informed News and Views..

நாட்டில் தேர்தல் நடத்த இது சரியான சந்தர்ப்பம் – பெசில்

இலங்கையில் தேர்தலை நடாத்துவதற்கு  இது சரியான தருணம் என இலங்கையின் முன்னாள் அமைச்சரும், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகருமான பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடக மையத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழாவில் இன்று (5) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அண்மைய தேர்தல்களில் வெற்றி பெற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவித்த பெசில், மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாமல் போனதற்கும் மன்னிப்பும் கோரினார்.

எவ்வாறாயினும், பின்னடைவுகளை நிவர்த்தி செய்து, தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தகைமை தனக்கு இல்லையென்றாலும், அரசியலில் தொடர்ந்தும் இருப்பேன் என பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

மேலும், மீண்டும் நாடாளுமன்றம் பிரவேசிக்க முடியாமல் போனதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த அவர், ஜனாதிபதியின் பணிகளை பாராட்டினார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here