சுவிட்சர்லாந்தின் முன்னணி நிறுவனமொன்று 15 நிமிடங்களில் வாகனங்களை முழுமையாக சார்ஜ் செய்யக் கூடிய சார்ஜர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இலத்திரனியல் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான உலகின் மிக வேகமாக சார்ஜராக இந்த சார்ஜர் கருதப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தின் ABB நிறுவனமே இந்த இலத்திரனியல் வாகன சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது.
இந்த வாகன சார்ஜர் வேகமானது மட்டுமன்றி ஒரே நேரத்தில் நான்கு வாகனங்களை சார்ஜ் செய்யக் கூடியது என நிறுவனம் தெரிவிக்கின்றது.
காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகளினால் உலகின் பல நாடுகளில் இலத்திரனியல் வாகனப் பயன்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனால் உலகம் முழுவதிலும் தற்பொழுது இலத்திரனியல் வாகனங்களை சார்ஜ் செய்யும் நிலையங்களுக்கான தேவை அதிகரித்து செல்கின்றது.
வேகமாகவும் இலகுவாகவும் வாகனங்களை சார்ஜ் செய்யக் கூடிய வகையில் இந்த புதிய வகை சார்ஜர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வகை சார்ஜருக்கு Terra 360 என பெயரிடப்பட்டுள்ளது.
மூன்று நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு வாகனத்தை சுமார் 100 கிலோ மீற்றர் வரையில் செலுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வகை சார்ஜர்கள் இந்த ஆண்டின் இறுதியில் ஐரோப்பிய சந்தைகளில் விற்பனை செய்யப்படும் எனவும், 2022ம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் விற்பனை செய்யப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.