சுவிட்சர்லாந்தில் 1968 ஆம் ஆண்டு விபத்துக்கு உள்ளான விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மலைப்பகுதியான அல்டாஸ் பனிமலை பகுதியில் இந்த விமான பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மலையேறு வீரர்களின் வழிகாட்டி ஒருவரினால் இந்த விமான பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த விமான பாகங்களை மீட்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்தில் 1968 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி இந்த விபத்து இடம் பெற்றிருந்தது.
தொழில்நுட்பக்கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் நிலவி வரும் வெப்பமான காலநிலை காரணமாக சில பகுதிகளில் பனிப்பாறைகள் உருகி வருவதனால் இவ்வாறு சில புதையுண்ட பொருட்கள் வெளியே தென்பட தொடங்கியுள்ளன.
இவ்வாறு தென்படும் பொருட்களை தொடவோ அல்லது அருகாமையில் செல்லவோ வேண்டாம் என போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்