பிரதமர் பதவி தமிழருக்கு வழங்குமாறு கோரிக்கை

சர்வக்கட்சி அரசில் அமைச்சரவையை வரையறுத்து பிரதமர் உள்ளிட்ட முக்கிய பதவிகளைத் தமிழர், முஸ்லிம்கள் இடையே பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும், இதன் மூலம் இலங்கை தொடர்பில் சர்வதேசத்துக்குச் சிறந்த செய்தியை கொண்டு செல்ல முடியும் என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் டலஸ் அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

கோழி, முட்டை விலைகள் அதிகரிப்பு

முட்டை ஒன்றின் விலை 10 ரூபாயினாலும் 1 கிலோ கோழி இறைச்சி ஒன்றின் விலை 100 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி முட்டை ஒன்றின் புதிய விலை 60 ரூபாய் என்றும் 1 கிலோ கோழிக்கறியின் புதிய விலை 1300 ரூபாய் எனவும் அகில இலங்கை கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.