Search

Menu

Keeping you Informed News and Views..

98 வயதிலும் சுவரேறும் சுவிஸ் சாகசக்காரர்

“ஏறுவது எனக்குப் பிடித்திருக்கிறது. மகிழ்ச்சி தருகிறது. அதை ஏன் கைவிடவேண்டும்.'' என்று Remy கூறுகிறார். அதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.

98 வயதிலும் சுவரேறும் சுவிஸ் சாகசக்காரர்

சுவிட்சர்லாந்தின் மூத்த குடிமக்களில் Marcel Remyயும் ஒருவர். அவருக்கு 98 வயது. மலையேறுவதிலும் சுவரேறுவதிலும் அவருக்கு ஆர்வம் அதிகம். இன்றும்கூட அவர் அதில் சுறுசுறுப்பாக இயங்குகிறார்.

லேக் ஜெனிவாவின் கிழக்குக் கரையில் உள்ள Villeneuveவில் இருக்கும் உள்ளக சுவரேறும் கேந்திரத்துக்கு ஒவ்வொரு திங்கட்கிழமை காலையும் தனது பழைய டொயோட்டா காரை ஓட்டிக்கொண்டு போவது அவரது வழமையான நடவடிக்கை.

அங்கு அவரது மகன் ஊடயரனந உடன் சேர்ந்து சுவரேறும் அப்பியாசங்களில் அவர் ஈடுபடுவார்.

அனுபவமுள்ள அவர் தனது சுவரேறும் காலணிகளை மெதுவாகப் போட்டுக்கொள்வார். தனது ஏறும் பாதையை திட்டமிட்டுக் கொண்டு 16 மீட்டர் உயரமான சுவரில் ஏறத் தொடங்குவார்.

“வேலை செய்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நீங்கள் நினைத்ததை செய்ய முடிகிறது. எனது ஆரோக்கியத்தக்காகவே நான் இதனைச் செய்கிறேன்.

ஏனெனில் இரண்டு மூன்று வாரங்கள் இதனை விட்டு விட்டால் மீண்டும் ஆரம்பிப்பது மிகவும் சிரமமாக இருப்பதை என்னால் உணர முடிகிறது.

எனவே இதனை தொடர்வதுதான் நல்லது. ஆனால் அளவுக்கு மீறவும் கூடாது. ஆதனால் ஏதேனும் ஆகி விடலாம். ஆளவை மீறாமல் இருந்தால் அது சரியாக இருக்கும்” என்று காலையில் அவர் மேற்கொள்ளும் இரண்டு ஏற்றங்களுக்கிடையில் கூறுகிறார்.

2017 இல் அவர் Miroir de l’Argentine என்ற சுவரேறும் நிகழ்வில் அவர் 500 மீட்டர் உயரமான சுண்ணாம்புச் சுவரை ஏறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Remyயின் வாழ்க்கையில் ஏறுவது ஒரு முக்கிய நிகழ்வாக இருந்துள்ளது. மலைகளின் கதைகளுடனேயே அவர் தனது காலத்தை கழித்திருக்கிறார். அந்த வகையில் அல்ப்ஸ் அவரது விளையாட்டு மைதானமாகியிருந்தது.

Remyசுவிஸ் ரயில்வேயில் வேலை பார்த்தவர். அவரது ஓய்வு நேரத்தை அவர் மலைகளிலேயே செலவிட்டார்.

அவரது மகன்மார் இருவரும் அவருடன் மலையேறுவதில் ஈடுபட்டனர்.

Remyமிகவும் கண்டிப்பானவர். நிலைமை எப்படியிருந்தாலும் வெற்றியை நோக்கியே செல்ல வேண்டும் என்பது எப்போதுமே அவரது நோக்கமாக இருந்தது “ என்கிறார் அவரது மூத்த மகன் Claude. அவரது வயது 68.

Remyயின் கண்டுபிடிப்பு எப்படியிருந்த போதிலும் தனது மலையேறும் ஆர்வத்தை Claude மற்றும் 65 வயதான அவரது சகோதரர் Yves ஆகியோருக்கு ஊட்டி வளர்த்திருக்கிறார்.

Photo : The Star

தந்தையைப் போலவே அவர்கள் இருவரும் மலையேறுவதில் சாதனைகளை படைத்துள்ளனர்.

2020 ஓகஸ்டில் Grimper என்ற பிரெஞ்சு சஞ்சிகை Remy மற்றும் அவரது மகன்மாரின் சிறப்பான மலையேறும் அனுபவங்களுக்காக 40இற்கு மேற்பட்ட பக்கங்களை ஒதுக்கியிருந்தது.

இப்போது பங்களிப்பு இடம்மாறியுள்ளது. Villeneuveஇல் உள்ள சுவரேறும் கேந்திரத்தில் காலை நேரத்தில் இரண்டாவது தடவையாக சுவர் ஏறும் போது Remy யை Claude தான் இப்போது வழி காட்டுகிறார். முதல் சில மீட்டர் தரத்தை Remy எந்த சிரமமும் இல்லாமல் ஏறிவிடுகிறார்.

ஆனால் மேற்பகுதியில் அவர் பல நிமிடங்களுக்கு சிரமப்படுகிறார்.

சிரமமான ஒரு பகுதியை எதிர்நோக்கினாலும் அவரது தன்னம்பிக்கை அவரை உயரே எடுத்துச் செல்கிறது.

தனது தந்தையின் வயதைக் கேட்டதும் அனேகமானோர் வியப்படைகின்றனர். ஆனால் இப்போதும் கூட அனைத்து வயதுத் தரப்பினருக்கும் அவர் மதிப்பளிக்கிறார்.

குறிப்பாகச் சொன்னால் வயது மிகவும் குறைந்தவர்களைகக் கூட அவர் மதிக்கிறார்.

அவர்களது சில நடவடிக்கைகளை அவர் பின்பற்றுகிறார் என்று அவரது மகன் Claude கூறுகிறார்.

அவர் இப்போது பெரும்பாலும் உள்ளக கேந்திரங்களிலேயே ஏறும் போதிலும் சில நேரங்களில் மலைகளிலும் ஏறுவதுண்டு.

ஏறுவதை அவர் இப்போதைக்கு நிறுத்தப் போவதில்லை என்கிறார் Claude.

“ஏறுவது எனக்குப் பிடித்திருக்கிறது. மகிழ்ச்சி தருகிறது. அதை ஏன் கைவிடவேண்டும்.” என்று Remy கூறுகிறார். அதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

98 வயதிலும் சுவரேறும் சுவிஸ் சாகசக்காரர்

“ஏறுவது எனக்குப் பிடித்திருக்கிறது. மகிழ்ச்சி தருகிறது. அதை ஏன் கைவிடவேண்டும்.'' என்று Remy கூறுகிறார். அதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.

98 வயதிலும் சுவரேறும் சுவிஸ் சாகசக்காரர்

Search here