Search

Menu

Keeping you Informed News and Views..

GSP+ மீளாய்வின் போது இலங்கையின் வெற்று வாக்குறுதிகளை நம்பக்கூடாது – HRW

மனித உரிமை விவகாரத்தில் இலங்கை என்ன செய்ய வேண்டும் என்பதனை பகிரங்கமாகவும் தெளிவாகவும் குறுகிய கால வரையறை நிர்ணயம் செய்து ஐரோப்பிய ஒன்றியம் அறிவிக்க வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது.

கடிதம் ஒன்றின் மூலம் மனித உரிமை கண்காணிப்பகம் ஐரோப்பிய ஆணைக்குழுவிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் இலங்கை எவ்வாறான மனித உரிமை கடப்பாடுகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதனை தெளிவாக வரையறுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

மனித உரிமை நிலைமைகள் சீரழிந்து வருவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக, இலங்கை அரசாங்கம் மேலோட்டமான நம்பமுடியாத உறுதிப்பாடுகளையே தொடர்ந்தும் வழங்கி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை வழங்குவது தொடர்பான மீளாய்வுகளின் போது வெறும் வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்ளாது திடமான மேம்பாடுகளை கவனத்திற் கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் சிறுபான்மையின மக்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அடக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

பயங்கரவாத்த் தடைச் சட்டம் துஸ்பிரயோகம் செய்பய்பட்டு வருவதாக மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

போர்க்குற்றச் செயல்கள் தொடர்பிலான பொறுப்பு கூறல் விவகாரங்களில் எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஐரோப்பிய பணிப்பாளர் Lotte Leicht தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாமை நீடித்தால் ஏற்படக்கூடிய விளைவுகளை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு திட்டவட்டமாக தெளிவுபடுத்த வேண்டுமென கோரியுள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டில் இலங்கைக்கு மீளவும் ஜீ.எஸ்.பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் வழங்கப்பட்டது.

மனித உரிமை மீறல்கள் குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்றவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் மனித உரிமை நிலைமைகள் மேலும் மோசமடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை ரத்து செய்வதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய முக்கிய உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் வெற்று வாக்குறுதிகளை நம்பிவிடாது தெளிவான நடவடிக்கைகளின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம், ஜீ.எஸ்.பிளஸ் சலுகைத் திட்டத்தை வழங்குவது குறித்து கவனம் செலுத்த வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here