Search

Menu

Keeping you Informed News and Views..

கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொள்ளுமாறு ஜனாதிபதி கோரிக்கை

நாட்டில் தற்பொழுது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக ஜனாதிபதி பொதுமக்களிடம் முக்கிய கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

தனது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாக டலஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நாட்டில் ஒரு பெரிய மாற்றம் நிகழும் என்று இந்த மக்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். அந்த நம்பிக்கைக்கு உயிர் கொடுக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அல் கய்தா தலைவரின் மரணம் குறித்து ஜோ பைடனின் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் ட்ரோன் தாக்குதலில் அல்-கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதிப்படுத்தினார்.

எரிபொருள் தட்டுப்பாட்டினால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நகரங்கள்

சுவிட்சர்லாந்தில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மிக அதிகளவில் இந்த நகரங்கள் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

சுவிஸ் தேசிய தினத்திற்கு ரஸ்ய ஜனாதிபதி வாழ்த்து

சுவிட்சர்லாந்து தேசிய தினத்தை முன்னிட்டு ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து ஜனாதிபதி இக்னேஸியோ காஸீஸிற்கு வாழ்த்து செய்தி ஒன்றை ரஸ்ய ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ளார். சுவிட்சர்லாந்திற்கு எதிராக ரஸ்ய தூதரகம் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வரும் நிலையில் இந்த வாழ்த்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ரஸ்யாவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்படும் தடைகளுக்கு அமைவாக சுவிட்சர்லாந்தும் இவ்வாறு தடைகளை விதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சீன ஆராய்ச்சி கப்பலை கண்காணித்து வரும் இந்தியா

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை எதிர்வரும் 11ஆம் திகதி வந்தடையவுள்ள சீன ஆராய்ச்சிக் கப்பலை இந்திய கடற்படை கண்காணித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுவிஸின் சில பகுதிகளில் கடுமையான ஆலங்கட்டி மழை

சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் கடுமையான ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. ஐரோப்பா முழுவதும் கடுமையான வெப்பநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் சில பகுதிகளில் இவ்வாறு கடும் மழை பெய்துள்ளது. பலத்த காற்றுடன் இவ்வாறு மழை பெய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பெரிய அளவிலான பனிக்கட்டிகள் மழையின் போது வீழ்ந்துள்ளது. பேசல், பேர்னின் ஒபர்லாண்ட், ஜூரா மற்றும் சுவிஸ் பிரெஞ்சு கான்டன்கள் என்பன இவ்வாறு மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன. எவ்வாறெனினும், வெப்பத்துடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் எனவும்

சூரிச் விமான நிலையத்தில் காணமல் போகும் பயணப் பொதிகள்

சுவிட்சர்லாந்தின் பிரதான விமான நிலையங்களில் ஒன்றான சூரிச் விமான நிலையத்தில் பயணப் பொதிகள் காணாமல் போவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுவிஸ் மக்கள் பணத்தை வீடுகளிலேயே பாதுகாக்க விரும்புகின்றனர்

சுவிட்சர்லாந்து வங்கியாளர்களின் நாடு என்ற போதிலும், நாட்டு மக்கள் பணத்தை வீடுகளிலேயே பாதுகாத்து வைத்துக் கொள்ள விரும்புகின்றனர்.

ஆயுத ஏற்றுமதி குறித்த சட்டம் திருத்தப்பட வேண்டும் – சுவிஸ் அமைச்சு

ஆயுத ஏற்றுமதி தொடர்பிலான சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு பரிந்துரை செய்துள்ளது.

ஸ்கன்டினேவிய விமான சேவை நிறுவன விமானிகளின் பணிப்புறக்கணிப்பில்

ஸ்கன்டினேவிய விமான சேவை நிறுவனத்தின் விமானிகளினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப் புறக்கணிப்பு போராட்டம் தொடர்கின்றது.

Search here