Search

Menu

Keeping you Informed News and Views..

எரிசக்தி தொடர்பான ஐரோப்பாவின் திட்டத்துடன் சுவிஸ் இணைய வேண்டும்

எரிசக்தி பயன்பாடு குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டத்துடன் சுவிட்சர்லாந்து இணைந்து கொள்ள வேண்டுமென சக்தி வளத்துறை அமைச்சர் சிமொனெட்டா சொமாருகா தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் காரணமாக ஏற்படக்கூடிய எரிபொருள் தட்டுப்பாட்டை ஈடு செய்ய ஐரோப்பிய ஒன்றியம் திட்டமொன்றை முன்மொழிந்துள்ளது. எரிபொருள் பயன்பாட்டை வரையறுக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலப் பகுதியில் மொத்த எரிபொருள் பயன்பாட்டை

சுவிஸில் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுக்கு தட்டுப்பாடு

சுவிட்சர்லாந்தில் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுக்கு தட்டுப்பாடு நிலை உருவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

சுவிஸ் தேசிய தினமன்று பட்டாசு கொளுத்த தடை

சுவிட்சர்லாந்து தேசிய தினம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பட்டாசு கொளுத்துவதற்கு அநேக கான்டன்கள் தடை விதித்துள்ளன.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என மதகுருமார் கோரிக்கை

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்தி அவர்களை விடுவிக்குமாறு கோரி மதகுருமார்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழு கோரிக்கை விடுத்து போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

அவசரகால சட்ட அமுலாக்கத்திற்கான வர்த்தமானியை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி நீதிமன்றில் மனு

பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அவசரகால சட்ட அமுலாக்கத்திற்கான வர்த்தமானியை வலுவிழக்க செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் நேற்று அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுவிஸ் அமைச்சர் பயணம் செய்த விமானத்தை தரை இறக்கிய பிரான்ஸ்

சுவிட்சர்லாந்து உள்துறை அமைச்சர் எலொய்ன் பீரெஸ்ட் பயணம் செய்த பிரத்தியேக விமானத்தை பிரான்ஸ் வான் படையினர் தரையிறக்கியுள்ளனர். அவசரமாக குறித்த விமானத்தை பிரெஞ்சு அதிகாரிகள் தரையிறக்கியுள்ளனர். பிரான்ஸ் விமான கட்டுப்பாட்டு கோபுரத்திலிருந்து தகவல்கள் கிடைக்கப் பெற்ற காரணத்தினால் இவ்வாறு விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை நடாத்தி ஆள் அடையாளத்தை உறுதி செய்து கொண்டதன் பின்னர் பிரத்தியேக விமானத்தில் பீரெஸ்ட் தனது பயணத்தை தொடர பிரெஞ்சு அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். அமைச்சர் பீரெஸ்ட்,

தென்னாபிரிக்கா சென்ற சுவிஸ் சுற்றுலா பயணிக்கு குரங்கம்மை

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ள சுவிட்சர்லாந்து பிரஜை ஒருவருக்கு குரங்கம்மை நோய் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சுவிஸில் எயார் கன்டிஷனர்களுக்கு அதிகரிக்கும் கிராக்கி

ஆல்ப்ஸ் மலைத் தொடர்களைக் கொண்ட குளிர்ந்த நாடான சுவிட்சர்லாந்தில் காற்று சீராக்கி அல்லது எயார் கன்டிஷனர்களுக்கான கிராக்கி அதிகரித்துள்ளது.

சுவிசில் கூடுதல் எண்ணிக்கையில் வெளிநாட்டு பிரஜைகளுக்கு தொழில் வாய்ப்பு>

சுவிசில் கூடுதல் எண்ணிக்கையில் வெளிநாட்டு பிரஜைகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அண்ணாத்து நிதி அமைச்சர் யூலி மயூரர் பரிந்துரை செய்துள்ளார்.

சுவிசில் கடுமையான வெப்ப நிலை குறித்து எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் நாட்களில் கடுமையான வெப்பநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து வளிமண்டலவியல் திணைக்களம் இது தொடர்பான அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் நிலவிய வெப்பநிலையை விடவும் இந்த வாரத்தில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இன்று நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய நாட்களில் வெப்ப அலை நிலவும் எனவும் வெப்பநிலையானது 31 முதல் 34 பாகை செல்சியஸ் வரையில் காணப்படும் எனவும்

உக்ரைன் மீட்பு மாநாடு ரஷ்ய உறவுகளை பாதிக்காது

உக்ரைன் மீட்பு மாநாடு ரஷ்யாவுடனான உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தாது என சுவிட்சர்லாந்தின் ஜனாதிபதி இக்னேஸியோ காஸீஸ் தெரிவித்துள்ளார்.

Search here